சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனுசன் மதுசங்கவுடனான ஊடக சந்திப்பு

துஷாரா, பைஷல் இஸ்மாயில் -

நோயின் மூலம் சமூதாயத்தினுள் ஒழிந்துகொண்டு வாழ்ந்த மக்களை பூரணமான மனிதர்களாக மாற்றியமைத்து எம்மைப்போன்று அவர்களும் சமூகத்தில் மதிக்கப்படவேண்டும் என்பதற்காகவே நான் பாடுபட்டு வருகின்றேன் - சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனுசன் மதுசங்க தெரிவிப்பு
யுத்த காலத்தின்போது மக்களுக்கு சாரியான முறையில் சிகிச்சைகளை வழங்காததன் காரணத்தினால் அன்று அம்மக்கள் சமூதாயத்தினுள் மறைந்து ஒதுங்கியவா்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனுசன் மதுசங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையினை மிக வெற்றிகரமாகவும், இலவசமாகவும் முன்னெடுத்துவரும் வைத்திய நிபுணருக்கும் ஊகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (30) குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முகம் என்பது ஒரு தனி மனிதனுடைய வசிகரத்தினை பிரதிபலிக்கும் உறுப்புக்களில் பிரதானமானதொன்றாகும். பெண்களைப் பொறுத்த வரையில் அழகினை பிரதி பலிக்கும் கண்ணாடியாகவும் இது விளங்குகின்றது.

கடந்த காலங்களில் யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாறான சிகிச்சை முறையினை மேற்கொள்ள வசதியற்றவர்களாகவும், வசதியிருந்து சிலர் வெளி மாவட்டங்களுக்குச் சென்று அதற்கான சத்திர சிகிச்சையினை செய்ய அச்சப்பட்டவர்களாகவும் சமூகத்தில் ஒழிந்துகொண்டு காணப்பட்டு வந்துள்ளனர்.
எமது நாட்டைப் பொறுத்த வரையில், இவ்வாறான சிகிச்சை முறையினை பெற்றுக்கொள்வதாக இருந்தால் கொழும்பு, கண்டி, காலி போன்ற இடங்களுக்குச் சென்றுதான் இந்த சத்திர சிகிச்சைகளைப் பெறவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் ஆளாகியவர்களாகவே காணப்பட்டு வந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளர்களை இனங்கண்டு தகுந்த முறையில் அவா்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக அம்மக்கள் வாழ்கின்ற கிராமங்களுக்குச் சென்று அவர்களின் காலடியில் இச்சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் அவர் தொரிவித்தார்.

அதுமாத்திரமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை அடையாளம் கண்டு அவர்கள் வாழும் கிராமங்களுக்குச் சென்று இலவச மருத்துவ முகாம்களை தற்போது நடாத்தி வருவதுடன் அவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சைகளையும், வைத்திய ஆலோசனைகளையும் வழங்கி வருவதாகவும், ஏனைய மாவட்டங்களிலுள்ள நோயாளா்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கான சகல வழி வகைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இச்சத்திர சிகிச்சையை மிகத் திறம்பட செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. அதில் 100 இக்கு 85 வீதமான காயங்கள் முகத்தில் ஏற்படுவதாகவும் அவற்றை சத்திர சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விபத்துக்குள்ளானவர்களை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதாகவும் முகத்தில் செய்யப்படுகின்ற சத்திர சிகிச்சையை செய்வதற்காக புதிய நுட்பங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி மிகச் சிறப்பான முறையில் வைத்திய குழுவின் உதவியுடன் அதனை திறன்பட செய்து முடித்தும் வருகின்றோம்.
அது மாத்திரமல்லாமல், பிறக்கும்போது முகத்தில் ஊனமுற்று பிறக்கும் குழந்தைகள், விபத்துக்கள் மூலமாக முகங்களில் ஏற்படுகின்ற உடைவுகள், முகத்திலும் வாய் உற்பகுதிகளில் ஏற்படுகின்ற புற்று நோய்களுக்கு விசேடமான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு அழகுக்கான சத்திர சிகிச்சை முறைகளையும் தான் மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு அனைத்து வகையான சிகிச்சைகளையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் செய்வதற்கு சகல வசதி வாய்ப்புக்களுடன் ஏற்பாடுகளும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு மனிதன் முகரீதியான தாக்கங்களை சந்திக்கும்போது அவன் சமூக ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகின்றான். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உள ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இவ்வாரானவர்களை அதிலிருந்து விடுப்பதற்காக முகத்தில் மேற்கொள்ளும் விஷேடமான சத்திர சிகிச்சையின் மூலம் அவர்களை இளமையான முகத் தோற்றத்துக்கு மாற்றியமைத்து வருவதாகவும் அவர் கூட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போது சொண்டு, தாடை பிழந்தவர்களாகவும் அதன் தாக்கம் மூக்கு முதல் கண்கள் வரை பிளவுகளுடன் காணப்படுகின்றனர். அவ்வாறான குழந்தைகளுக்கு தரம் தரமாக 5 வகையான சிகிச்சை முறையினை மேற்கொள்கின்றோம். அதன் ஆரம்ப சத்திர சிகிச்சையை மூன்று மாதத்தில் ஆரம்பித்து பதினேழு வயது வரையான காலப்பகுதியில் குறித்த 5 வகையான சத்திர சிகிச்சைகளை முன்னெடுப்பதன் மூலம் அக்குழந்தையின் முகத்தை சாதாரண மனிதர்களின் முகம் போன்று மாற்றியமைக்க முடியும்.
இந்த வைத்திய முறையினை தேர்ந்தெடுத்தன் நோக்கம் நோயாளர்களுக்கு நல்ல சிகிச்சைகளை வழங்கி அவர்களை பூரணமான மனிதர்களாக மாற்றி எம்மைப்போன்று சமூகத்தில் அவர்களும் மதிக்கப்படவேண்டும் என்பதனாலும் இதன் மூலம் நான் நூறு வீதம் மகிழ்ச்சியடைகின்றேன். என்றும் எனது பணியினை இன்னும் பத்து வருடங்களுக்கு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இருந்துகொண்டு கடமை புரிய மிக ஆர்வமாக இருக்கின்றேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -