சிறுவர்களுக்கு பீடி விற்ற கடை உரிமையாளருக்கு பொலிஸார் எச்சரிக்கை


அப்துல்சலாம் யாசீம்-
13 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு பீவி விற்பனை செய்த கடை உரிமையாளரை எச்சரிக்கை செய்து விடுவித்த சம்பவமொன்று நேற்றுமாலை (16) இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை ரொட்டவெவ பகுதியிலுள்ள வயோதிபரொருவரின் கடையொன்றில் 10 ரூபாய்க்கு பீடியை வாங்கிச்சென்று பாடசாலை வளாகத்தில் 13வயதுடைய மாணவர்கள் குடித்துக்கொண்டிருக்கும் போது மாணவர்களை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.

இதனையடுத்து மாணவர்களிடம் பீடி எங்கிருந்து பெறப்பட்டது என விசாரணை செய்த போது வயோதிபரின் கடையில் வாங்கியதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை மாணவர்கள் இருவரும் பீடியை வாங்கிக்கொண்டு சென்று கஞ்சாவை பீடிக்குள் கலந்து குடிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடை உரிமையாளரை ரொட்டவெவ பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சிறுவர்களுக்கு இனிவரும் காலங்களில் பீடி.சிகரெட் விற்றமை தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -