வித்தகர் கலாபூசணம் முகில்வண்ணன் அவர்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு.

காரைதீவு சகா-
ல்முனை தமிழ் பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச மூத்த எழுத்தாளர்கள் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்தவரான வித்தகர் கலாபூசணம் முகில்வண்ணன் அவர்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா இன்றைய தினம்(03) கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் எஸ்.கே. லவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முகில் வண்ணன் அவர்களுடைய சிறுவர் நூல் - இளவரசன், நாவல் - இராசாத்தி, சிறுகதை நூல் - மனுஷ்யா ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் முதற் கட்டமாக பிரதேச செயலாளர் திரு. எஸ். கே.லவநாதன் அவர்கள் தனது தலைமையுரையுடன் கூடிய வரவேற்பு உரையினை நிகழ்த்தினார். தொடர்ச்சியாக நூல்களிற்கு அணிந்துரை வழங்கிய விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா மற்றும் பைந்தமிழ் குமரன் ஜெயக்கொடி டேவிட் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இதனை தொடர்ந்து வித்தகர் கலாபூஷணம் மு.சடாட்சரன் அவர்களும் கலாநிதி பரதன் கந்தசாமி அவர்களும் நூல் வெளியீட்டு உரைகளை நிகழ்த்த தொடர்ச்சியாக முகில் வண்ணன் அவர்களின் நூல்கள் வெளியிடப்பட்டன. மூன்று நூல்களின் முதற் பிரதியினையும் பிரதேச செயலாளர் பெற்றுக்கொண்டார்.
அதன் பின் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பெற்றுக்கொண்டனர்.மேலும் முகில் வண்ணன்
தனது ஏற்புரையினை நிகழ்த்தினர்.இறுதியாக கலாசார உத்தியோகத்தர் திரு.த.பிரபாகரன் அவர்களின் நன்றியுரையோடு இனிதே நிகழ்வு நிறைவுற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை பிரதேசத்தின் மூத்த எழுத்தாளர்கள், இளம் கலைஞர்கள், கவிஞர் பெருமக்கள், பல இலக்கியவாதிகள் ஆகியோருடன் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -