ஓட்டமாவடி - தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் கா.பொ.த.உயர்தர மாணவர்களால் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக "மஜல்லதுஸ் ஸலாம்" எனும் பெயருடைய சஞ்சிகை தொகுக்கப்பட்டு கல்லூரியின் முதல்வர் எம். பீ. எம். இஸ்மாயில் மதனி அவர்களால் (13) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் முதல்வர் எம். பீ. எம். இஸ்மாயில் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் அல்ஹாபிழ் ஏ.எச்.இர்பான் நஹ்ஜி, செயலாளர் ஏ.எல்.முஸ்தபா ஸலாமி மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.