ஹஸ்பர் ஏ ஹலீம்-
இனவிகிதாசாரப்படி திருகோணமலையில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படவேண்டும் அதனுடன் சேர்த்து கிராம சேவகர் பிரிவுகளும் அதிகரிக்கப்படவேண்டும்
உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் அப்துல்லா மஹ்ரூப் எம்.பி கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் இனவிகிதாசாரப்படி மேலும் புதிய மூன்று பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படவேண்டும் .தோப்பூர்,குறிஞ்சாக்கேணி,புல்மோட்டை ஆகிய மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் திங்கட் கிழமை(21) மூதூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் திருகோணமலை மாவட்டம் சனநெறிசலை கொண்ட அதிக மக்கள் தொகையையும் கொண்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன முஸ்லீம்கள் 44 வீதமும்,தமிழர்கள் 32 வீதமும்,சிங்களவர்கள் 24.5 வீதமும் வாழ்ந்து வருகின்ற அதே வேலையில் இனவிகிதாசாரப்படி மூன்று புதிய பிரதேச செயலகங்கள் இங்கு உருவாக்கப்படவேண்டும் என்பதுடன் மக்கள் தொகை ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் அதிக குடும்பங்கள் வாழ்ந்து வருவதனால் கிராம சேவகர் பிரிவுகளும் அதிகரிக்கப்படவேண்டும் இதனால் மக்களுக்காக சேவையாற்றுவதில் கிராம அதிகாரிகள் தங்களது வேலைகளை நிறைவேற்றுவதில் விரைவற்ற தன்மை காணப்படுகிறது மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 42கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகிறது இதில் 66 வரையான பிரிவுகள் காணப்படவேண்டும் அதேபோன்று கிண்ணியாவில் 32 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகிறது இது 53 ஆக அதிகரிக்கப்படவேண்டும்,தம்பலகாமத்தில் 12 கிராம சேவகர் பிரிவு காணப்படுகிறது இது 24 ஆக அதிகரிக்கப்படவேண்டும் .மொத்தமாக நாடாளாவிய ரீதியில் 332 பிரதேச செயலகங்கள் காணப்படுகிறது திருகோணமலையில் 11 பிரதேச செயலகங்கள் காணப்படுகிறது இவ்வாறு இருக்க புல்மோட்டை,தோப்பூர்,குறிஞ்சாக்கேணி போன்றவற்றில் மூன்று பிரதேச செயலகங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என்ற வாக்குறுதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்டபோது அதை அவர் 2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதும் ஜனாதிபதி தேர்தலின்போது கிண்ணியாவில் வைத்து வாக்குறுதியளித்திருந்தார் ஆனாலும் நிறைவேற்றப்படவில்லை .மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கிராமிய அலுவலகமான நிலசெவன நிலையங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தபோது அது தற்போது மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூரிலும், கிண்ணியாவிலும் புதிதாக திறக்கப்பட்டுள்ளது தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவிலும் புதிய நிலசெவன கிராமிய அலுவலகம் அமையவுள்ளது இவ்வாறான அரச நிலசெவன அலுவலகம் ஊடாக மக்கள் இலகுவாக தங்களது கிராம சேவகர் பிரிவுக்குள் கிராம அதிகாரி,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,திவிநெகும உத்தியோகத்தர்களை சந்தித்து சேவைகளைப் பெற முடியும் . புதிய பிரதேச செயலக கட்டிடங்களை அமைத்து தந்தமைக்கு அமைச்சருக்கு நன்றியையும் தெரிவிப்பதாக கூறினார்.இப் புதிய பிரதேச செயலக கட்டிடத் திறப்பு விழாவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்,இம்ரான் மஹ்ரூப்,துரைரட்ணசிங்கம் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான நஜீப் ஏ மஜீத்,முன்னால் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து காணி அமைச்சர் ஆரியகலபதி,சேருவில தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான டொக்டர் அருண சிறிசேன ,உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கொடிக்கார ,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார,மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா உள்ளிட்ட முப்படை அதிகாரிகள்,அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.