மாகாணசபைத் தேர்தலுக்காக புதிய அக்கினிக் குண்டை வீசும் தமிழ் தேசிய கூட்டமைப்பு


காரைதீவு நிருபர் சகா-
வீர வசனம் பேசி மக்களை உசிப்பேற்றுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கைவந்த கலை. அந்த அடிப்படையில்தான் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக முன்கூட்டியே ஒரு புதிய அக்கினிக் குண்டை வீசியுள்ளார்கள்.எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் அரசியல் தீர்வு வராவிட்டால் வடகிழக்கில் நிர்வாக முடக்கல்களை மேற்கொள்வோம் என்றும்இ அத்துடன் தங்கள் நாடாளுமன்ற பதவிகளை இராஜினாமா செய்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு புதிய அக்கினிக் குண்டு என முன்னால் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவத்துள்ளார்.

அவுஸ்திரெலியா மெல்போனில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக சோ.கணேசமூர்த்தி கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
கடந்த முற்பது வருடகால யுத்தம் எமது மக்களை அடி பாதாளத்துக்கு கொண்டுசென்றது. இதற்கு உரம் போட்டவர்கள் இவர்கள்தான். யுத்தம் ஓய்ந்து பத்து வருடகாலம் சென்றுள்ளது. கடந்த அரசு எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறிய இவர்கள் எந்தவித தாக்கமான செயல்பாட்டிலும் இவர்கள் ஈடுபடவில்லை. கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக புதிய தேசிய அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் சுயமாக முன்வந்து நல்லினக்க அரசாங்கத்தினைக் கொண்டு வந்தார்கள். இதற்கு நாங்கள்தான் காரணம் என்று இவர்கள் உரிமை கோருகின்றார்கள்.

அன்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பாரிய பின்னடைவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கியது. எனது பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் கடந்த தேர்தலைவிட நூறு வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கியுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள கற்குடா தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆட்சியமைத்துள்ளது. இவ்வாறுதான் வடக்கில் பாரிய பின்னடைவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கியுள்ளது.
வழமைபோல் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்கு வங்கியினை அதிகரிக்கலாம் என நினைக்கின்றார்கள்.புதிய அரசுடன் இணக்கம் வந்தவுடன் எதிர்கட்சிப் பதவியினைப் பெற்றார்கள்.இனப்பிரச்சனைக்கான தீர்வு 2016க்கு முன்னர் பெறுவோம் எனக் கூறினார்கள். இதன் பின்னர் 2017ல் கிடைக்கும் என்றார்கள் ஆனால் கிடைத்தபாடில்லை. இந்த சுத்துமாத்தினை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்தபடியால்தான் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நல்ல பாடத்தினை மக்கள் புகட்டியுள்ளார்கள்.
இந்த பின்னடைவை ஈடு செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அக்கின் குண்டை வீசியுள்ளர்கள். வடகிழக்கில் நிர்வாக முடக்கல்களை மேற்கொள்வோம் என்றும்இ அத்துடன் தங்கள் நாடாளுமன்ற பதவிகளை இராஐpனாமா செய்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதனை அவர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிரூபிக்க வேண்டும்.
இவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு முகமும் அரசுக்கு இன்னொரு முகத்தினைக் காட்டுகின்றார்கள். மேற் பிப்ரியில் ஓடிய ஒருத்தர் நாடாளுமன்ற உறுப்பினராகிய பின்னர் மட்டக்களப்பில் வீடுஇகோடிக்கணக்கு பெறுமதியான வாகத்தின் சொந்தக்காறராக உள்ளார்கள். கடந்த அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஐம்பது இலச்சம் ரூபா பெறுமதியான இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளை தங்கள் உறவினர்களுக்கு மட்டும் வழங்கியுள்ளார். இவர்கள் எவ்வாறு அரசிடம் சலுகைகளைப் பெறவில்லை என்று கூற முடியும்?.
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்காக அரசிடம் சலுகையினைப் பெற்றால் எவ்வாறு அரசியல் தீர்வைப் கோரமுடியும் என்றார்கள். ஆனால் எதிர்கட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை வரப்போகுது என்றவுடன் ஜனாதிபதியின் இல்லத்தில் காட்சியளிக்கின்றார்கள்.இவர்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. ஆகவேதான் தேர்தல் வரும்போது அடிக்கடி புதிய குண்டுகளை வீசுவார்கள். இதனை இந்தத் தடவை செயலில் காட்ட வேண்டும். வருகின்ற எட்டாம் மாதம் அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -