விசேட வைத்திய நிபுணர் தேசமானிய டாக்டர் கே. ஆர். ஹிர்சாந்
காரைதீவு நிருபர் சகா-
அருணோதய மக்கள் முன்னணி வெற்றி பெற பிரதேச சபைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருந்து நீரிழிவு, டெங்கு, சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றை இல்லாமல் விரட்டுகின்ற வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்று இக்கட்சியின் செயலாளர் நாயகமும் , ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் இணை தலைவரும், ஜனாதிபதியின் சிறுநீரக பாதுகாப்பு செயலணியின் தேசிய ஆலோசகரும், கல்வி அமைச்சின் போசாக்கு ஆலோசகருமான விசேட வைத்திய நிபுணர் தேசமானிய டாக்டர் கே. ஆர். ஹிர்சாந் எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு
கேள்வி:- உங்களுடைய கட்சியை குறித்து கூறுங்கள்?
பதில்:- அருணோதய மக்கள் முன்னணி 1998 ஆம் ஆண்டு உதயம் பெற்றது. இது மக்கள் நலன்புரி அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டு, தொழிற்சங்கமாக செயற்பட்டு, அரசியல் கட்சியாக பரிணமித்தது. ஆரம்பிக்கப்பட்டது முதல் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபட்டு வருகின்றோம். வேறு கட்சிகளுடன் இணைந்து தேர்தல்கள் கேட்டிருக்கின்றோம். இருப்பினும் 2005 ஆம் ஆண்டு முதல் எமது தனித்துவத்தை நிலை நாட்டி வருகின்றோம். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழை பழ சீப்பு சின்னத்தில் பங்காளி கட்சிகளில் ஒன்றாக போட்டியிட்டு 21 ஆசனங்களை வெற்றி கொண்டு உள்ளோம். அதிலும் குறிப்பாக 07 பிரதேச சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கிற சக்தியாக நாம்தான் காணப்படுகின்றோம். இவற்றுள் மஸ்கெலியா பிரதேச சபை, வலப்பனை பிரதேச சபை, நெடுங்கேணி பிரதேச சபை ஆகியன குறிப்பிட்டு சொல்ல கூடியவை ஆகும்.
கேள்வி:-நீங்கள் ஒரு வைத்திய நிபுணராக இருந்து கொண்டு அரசியலில் தீவிரமாக இறங்கி செயற்பட காரணம் என்ன?
பதில்:- வைத்தியரால் நோயாளியை குணப்படுத்த முடிகின்றது. அரசியல்வாதியால் சமுதாயத்தை சீர் செய்ய முடிகின்றது. மேலும் இரு துறைகளும் நீதியாக, நேர்மையாக, நேர்த்தியாக கையாளப்பட வேண்டியனவாக உள்ளன. மேலும் நமது சமூகத்துக்கு பரந்துபட்ட அளவில் சுகாதாரம், பொருளாதாரம், கல்வி, நலன்புரி போன்ற துறைகளில் சட்டபூர்வமான வகையில் நேர்மையாகவும், நேரடியாகவும் சேவை செய்வதற்கான வாய்ப்பை அரசியல் வழங்குகின்றது என்றால் மிகை ஆகாது. மக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாடு ஆரோக்கியமானதாக இருக்கும். ஆகவேதான் ஆரோக்கியமான மக்கள், செழிப்பான நாடு என்கிற பூட்கையுடன் மக்களுக்கான எமது அரசியலை முன்னெடுக்கின்றோம். 1950 களில் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, டெங்கு போன்ற நோய்கள் இருந்து இருக்கவில்லை. அதே போல மக பேற்று நிபுணர்கள் இருந்திராத அன்றைய காலத்தில் மக பேறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்திருக்கவே இல்லை. அன்று மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், இன்று மக்கள் ஆரோக்கியம் இழந்து வாழ்கின்றார்கள். இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம் ஆகியனதான் ஆரோக்கியம் அற்ற வாழ்க்கைக்கு அனைத்து விதங்களிலும் அடிப்படை காரணங்கள் ஆகும். குறிப்பாக அவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ, அசிரத்தையாகவோ இரசாயன பதார்த்தங்களை உட்கொள்கின்றனர். இது குறித்து மக்களுக்கு சுகாதார ரீதியாக விழிப்பூட்ட வேண்டி உள்ளது. இப்பணியை நாம் செவ்வனே செய்து வருகின்றோம். மேலும் ஆரோக்கியமான மக்களை கொண்ட நாட்டை கட்டி எழுப்புவது எமது உச்ச பட்ச இலட்சியங்களில் முக்கியமானது ஆகும். ஆயினும் இதற்கான அரசியல் அதிகாரத்தை மக்கள் எமக்கு தர வேண்டி உள்ளது. இருப்பினும் நாம் தெரிவாகி உள்ள பிரதேச சபைகளுக்கு உட்பட்ட இடங்களில் மக்களின் ஆரோக்கியத்தை கட்டி எழுப்ப அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் செயற்படுகின்றோம். குறிப்பாக இந்த இடங்களில் இருந்து நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, டெங்கு ஆகியவற்றை இல்லாமல் விரட்டுவோம். இதற்கான வழிமுறைகள், பொறிமுறைகள், திட்டங்கள், மூலோபாயங்கள் ஆகியன எம்மிடம் உள்ளன.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இணை தலைவர்களில் ஒருவரான நீங்கள் நல்லாட்சி குறித்து என்ன சொல்கின்றீர்கள்?
பதில்:- மக்களின் தேவைகள், விருப்பங்கள், அபிலாஷைகள் ஆகியவற்றை நிறைவேற்றி கொடுப்பதில் நல்லாட்சியின் போக்கு திருப்திகரமானதாக இல்லை என்பதே யதார்த்தமான நிலைவரம் ஆகும். குறிப்பாக இந்நல்லாட்சியை கொண்டு வருவதில் முன்னின்று செயற்பட்டவர்கள் தமிழ் பேசும் மக்கள் ஆவர். ஆனால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து கொடுப்பதில் இன்னும் அதீத அக்கறையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டி உள்ளது. குறிப்பாக அரசியல் தீர்வு முயற்சி, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, நில விடுவிப்பு, அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, வாழ்வாதார எழுச்சி போன்ற விடயங்களை அரசாங்கம் கையாள்வதில் போதாக்குறை நிலவுகின்றது. இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தமிழ் பேசும் மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் எந்த கட்சிக்கும் தனித்த பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டு அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் இருப்பதால் அவரால் சில முடிவுகளை எடுக்க முடியாமல் உள்ளது.
கேள்வி:- கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து பணியாற்றுகின்ற அனுபவம் குறித்து கூறுங்கள்?
பதில்:- இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் உண்மையான ஒரு மக்கள் சேவையாளன் ஆவார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது இவரின் தாரக மந்திரமாக உள்ளது. இவர் கல்வி இராஜாங்க அமைச்சராக விளங்குவது தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்க பெற்று உள்ள வரம் ஆகும். கல்வி அமைச்சு மூலமான வரப்பிரசாதங்களை தமிழ் பேசும் மக்களுக்கு பெற்று கொடுப்பதில் இவர் முன்னின்று உழைத்து வருகின்றார். கல்வி அமைச்சுக்குள் என் போன்ற துறை சார்ந்த தமிழ் நிபுணர்களை கணிசமான அளவில் உள்ளீர்த்து இருப்பதன் மூலமாக தமிழ் பேசும் மக்களுக்கான சேவைகள் சரியாகவும், முறையாகவும், துரிதமாகவும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தி உள்ளார்.
கேள்வி:- இத்தருணத்தில் நீங்கள் தமிழ் மக்களுக்கு கூறுகின்ற அறிவுரை என்ன?
பதில்:- தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக சிந்தித்து செயற்படுவது இல்லை என்றே கூறலாம். இவ்விடயத்தில் தமிழ் மக்கள் சிங்களவர்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டி உள்ளது. மஹிந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்கிற சரியான முடிவை கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சிங்கள மக்கள் எடுத்து இருந்தனர். ஆட்சியில் இருந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரேயொரு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆவார். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் எதுவும் நடப்பதாக இல்லை என்று கண்டு கொண்ட நிலையில் இதே சிங்கள மக்கள்தான் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்தை விட்டு விட்டு எதிர் கட்சியினருக்கு வாக்குகளை அள்ளி வழங்கி உள்ளனர். ஆனால் வடக்கு, கிழக்கிலும் சரி, மலையகத்திலும் சரி தமிழ் மக்கள் பொதுவாக ஒரு சாராரையே தொடர்ந்து ஆதரித்து வருகின்றார்கள். குறிப்பாக மலையகத்தில் வழக்கமான இரு தலைமைகளில் ஏதோ ஒன்றையே மாறி மாறி ஆதரிப்பதோடு உடனடியாக கிடைக்க கூடிய பணம், மது பானம் போன்ற சிப்பந்தி இலாபங்களுக்காக எதிர்காலத்தை விற்கின்றார்கள். சின்னம் அல்ல, எண்ணமே முக்கியம் என்பதை தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் சமுதாய நலன் விரும்பிகள் போன்றோர் உணர்ந்து உண்மையான பொது நோக்கம் உடையவர்களை ஆதரிக்க வேண்டும் என்று கோருகின்றோம். இருப்பினும் கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை பார்க்கின்றபோது மலையகத்தில் ஒரு சதவீத முன்னேற்றம் தெரிகின்றது. வடக்கு, கிழக்கிலும் மாற்றம் தென்படுகின்றது. எல்லா கட்சிகளுக்கும் பலத்த அடி கடந்த தேர்தலில் விழுந்து இருப்பதோடு 187 சபைகள் தொங்கு சபைகளாக உள்ளன என்பதையும் இவ்விடத்தில் கூறி வைக்கின்றேன்.