உலமாசபை பள்ளிகளுக்குள் சக்தி FM குழுவை அனுமதிக்க வேண்டாம்


எஸ்.எம். சபீஸ்-
ண்மைக்காலத்தில் நமது மக்கள் அனுபவித்த வேதனைகளை உங்களைப்போன்று தானும் சாதாரண ஒரு முஸ்லிமாக இருந்து அனுபவித்தவன் என்றரீதியிலும் அக்கரைப்பற்றிலுள்ள பெரும்பாலானவர்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்களினது உணர்வுகளை விளங்கிக்கொண்டவன் என்ற அடிப்படையிலும் அரசியலுக்கப்பால் நான் இதனை சொல்ல வருகின்றேன்.

தமிழ் பேசும் ஊடகங்களை முஸ்லிம் மக்கள் தமக்குரிய ஊடகமாக நம்பி வந்தனர் ஆனால் அவர்களோ முஸ்லிம் மக்களை தமது தேவைகளுக்காக கிள்ளுகீரையாக பயன்படுத்தி வருவதனை நாம் பலவருடங்களாக அவதானித்து வருகின்றோம்.
அண்மையில் அம்பாறை மற்றும் திகணை போன்ற இடங்களில் சிங்கள கடும்போக்காளர்கள் எமது மக்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பாரியளவில் துன்பத்தையும், சேதத்தையும் விளைவித்தபோது செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் நடந்துகொண்ட சக்தி FMம் நமது புனித நோன்பு காலங்களில் எமது பள்ளிகளுக்குள் வந்து நேரடி ஒலிபரப்பு செய்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோக செயல்களை வெளியுலகிற்கு காட்ட முற்படாத சக்தி FM ன் நேரடி ஒலிபரப்புக்களை நமது பள்ளிவாயல்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் என தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -