அண்மையில் வழங்கப்படவுள்ள பட்டதாரி நியமனங்களுக்குள் HNDA உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளை உள்வாங்கும் படி, தொழில் ரீதியான தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற் சங்கத்தினர் இன்று (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து அரசாங்கத்திற்கு கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
2005 மற்றும் 2012 ஆம் ஆண்டு HNDA பட்டதாரிகள் அரச நியமனத்துக்குள் உள்வாங்கப்பட்டது போல, இந்த அரசாங்கமும் HNDA பட்டதாரிகளை அரச நியமனத்துக்குள் உள்வாங்க வேண்டும் எனவும், அண்மையில் தேசிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் போது HNDA பட்டதாரிகளையும் உள்ளவாங்க ஆவண செய்வதோடு அரச வயதெல்லையை 45 ஆக அதிரித்து தருமாறும், அவர்கள் கோரிக்கை விடுத்தர்.
இவர்களது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
கடந்த அரசாங்க காலப்பகுதியில், விசேடமாக HNDA பட்டதாரிகள் நியமனம் பெறுவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்களிப்பு மிகவும் மேலாக கிடைத்தையிட்டு சங்கத்தினர் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தோடு, அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -