கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் இருந்து தரம் 9A மாணவர்களான எம்.ஏ.எம். அஹ்னாப், ஏ.கே. முபீஸ், ஏ.எம்.எம். ஸகீல் மற்றும் ஜே.எம் சிப்னாஸ் ஆகியோர் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு நடாத்திய "Sashak Nimavum-2018" (ஆயிரம் படைப்புகள்) மாகாண மட்ட போட்டியில் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்று கொண்டனர். இப்போட்டியானது மட்டக்களப்பு மஹஜன கல்லூரியில் இன்று (19.05.2018) இடம்பெற்றது.
இம்மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்திக்குழு மற்றும் பழைய மாணவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.