அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 13.05.2018 ஆம் திகதியன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு தொடர்பாக அச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களின் அறிக்கை:மேற்படி மாநாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர், பொருளாளர் போன்றோரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக கூட்டப்பட்டதாகும். இம்மாநாட்டின் மூலம் ஊடகவியலாளர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே முரண்பாட்டினை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர் சங்கத்தின் சில உறுப்பினர்கள் இவ்வாறான முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளனர். இம்மாநாடு ஆசிரியர் சங்கத்தின் ஒட்டுமொத்த அங்கத்தவர்களின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் கூட்டப்பட்டதல்ல என்பதுடன் இம்மாநாட்டினைக் கூட்டுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறைப்படியான விண்ணப்பம் எதனையும் ஆசிரியர் சங்கம் முன்வைக்கவில்லை. இதன்காரணமாகவே குறித்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கான அனுமதி வழங்கப்படாததுடன் குறித்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழக எல்லைக்குள் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பதையும் கருத்திற்கொள்ளவும். மேலும் இம்மாநாட்டில் தலைவரினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கும் ஆசிரியர் சங்க அங்கத்தவர்களுக்கும் இடையே எந்தத்தொடர்பும் இல்லை. இக்கருத்து தலைவரின் தனிப்பட்ட கருத்தேயன்றி ஆசிரியர் சங்கத்தின் முழுமையான கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதையும் தங்களுக்கு மிகுந்த பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.
நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள்
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TASEU)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில்.
TASEU வின் ஒரு குழுவினர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள தகவல் கடிதத்தை இத்துடன் இணைத்திள்ளோம்,