நிந்தவூர் கமு / அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க ஐக்கிய ராஜ்ய (UK Wing) கிளை அன்குரார்பண நிகழ்வு, கடந்த 06.05.2018 ஞாயிறு அன்று லண்டன் வலண்டைன்ஸ் பூங்கவிலே புலம் பெயர்ந்து ஐக்கிய ராஜ்யத்தில் வாழும் மாணவர்களின் ஒன்று கூடலுடன் ஆரம்பமானது.
இதில் ஐக்கிய ராஜ்யத்தின் பல பாகங்களிலும் வாழும் மாணவர்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விசேடமாகக சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கான பலூன் உடைத்தல் , சாக்கோட்டம் , ஓட்டப் போட்டி என்பன நடாத்தப்பட்டன. முக்கியமாக எலி ஓட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது . அதற்கடுத்து கிரிக்கட் சுற்றுப் போட்டியும் நடை பெற்றது.. இதன் நிறைவில் இடம் பெற்ற கலந்துரையாடலில் பாடசாலையின் அபிவிருத்தியில் பழைய மாணவர்களின் பங்கு பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.