டி20 கிரிக்கெட் தொடர் பெண்கள் அணிகள் பலப்பரீட்சையில்




ங்கிலாந்தில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்க வீராங்கனை டாமி பியூமோன்டின் (59 பந்தில் 71 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது.

பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். அந்த அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் லூயஸ் முதல் இரண்டு பந்திலும் பவுண்டரி அடித்ததுடன், 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றிபெற வைத்தார். இவரது ஆட்டத்தால் 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



தொடக்க வீராங்கனையும் விக்கெட் கீப்பரும் ஆன லீ 37 பந்தில் 68 ரன்களும், லூயஸ் 52 பந்தில் 63 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து வீராங்கனைகள் மோதினார்கள். இதில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து வீராங்கனைகள் 118 ரன்னில் சுருண்டார்கள். இதனால் இங்கிலாந்து பெண்கள் அணி 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -