மண்ணும் மக்களும் மாலை சூட்டும் மகத்தான மாண்மியம்.



இமாம் றிஜா-

நே
ற்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்ற பின் இன்று தனது பிறந்தகமான வவுனியாவுக்கு வருகை தந்த கெளரவ பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களுக்கு ஆதரவாளர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு வவுனியா நகரமெங்கும் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்ற வழிகளெங்கும் குழுமியிருந்த மக்களும் ஆதரவாளர்களும் அவருக்கு மலர் தூவி மாலையணிவித்து மகத்தான வரவேற்பையளித்தனர்.

நூற்றுக்கணக்கான மோட்டர் சைக்கிள்கள் ஆட்டோக்கள் வாகனங்களுடன் ஆரம்பித்த வாகனப் பவனி இரட்டை பெரிய குளத்திலிருந்து ஆரம்பித்து மூவின மக்களும் புடைசூழ நகர வழியாக பயணித்து இந்து,இஸ்லாமிய, பெளத்த, கிறிஸ்தவ சமயக்குரவர்கள் ஆசிவழங்கிய பின்
ஊர்வலம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.

பிரதி அமைச்சரின் பவனியையொட்டி இன்று வவுனியா நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது மக்கள் பட்டாசுள் முழங்கி ஆரவாரித்தனர்
வவுனியா வர்த்தக சம்மேளனங்கள்,பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து வரவேற்பு ஏற்பாடுகளை நெறிப்படுத்தியிருந்தன.

வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சேனக்க அபயகுணசேகர தனதுரையில் குறிப்பிட்டதாவது.

இந்த வன்னி மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு அதிகலவான ஆசனங்களை பெறுவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய இந்த மண்ணின் மைந்தனுக்கு இந்த வன்னி மக்கள் அளிக்கும் பெரு வரவேற்பை பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஜனாதிபதி பெருமதிப்பு வைத்திருக்கின்ற இளைஞர்களில் ஒருவராக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் விளங்குகிறார் என ஆதரவாளர்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே குறிப்பிட்டார்.

இங்கு உரை நிகழ்த்திய கெளரவ பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தனதுரையில் குறிப்பிட்டதாவது.

என்னிடம் இனமத பேதம் கிடையாது. நானும் எனது குடும்பமும் சகோதர இனங்களோடு எப்பொழுதும் நல்லுறவுகளை பேணியே வந்திருக்கிறோம்,
எனக்குக் கிடைத்த இந்து சமய பிரதியமைச்சைக் கூட அம்மக்களின் உணர்வுகளை மதித்தே இராஜினாமாச் செய்தேன் எனவும் குறிப்பிட்டார்.

மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல நூறு ஆதரவாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -