இதற்கிடையே, மன்னர் சாலமனின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியது. அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இன்று அபுதாபியில் பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள வரலாற்று சிறப்புமுக்க சட்டத்தை குறிக்கும் வகையில், இந்த பந்தயம் தொடங்கும் முன்னர், சவுதி அரேபியா கார்பந்தய அமைப்பின் முதல் பெண் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள அசீல் அல்-ஹமாத் பார்முலா ஒன் காரை ஓட்டினார்.
அவர் ஓட்டிய கார் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் முதலிடம் பிடித்த கிமி ராய்க்கோனென் பயன்படுத்திய காராகும்.

முன்னதாக சவுதி அரேபியா இளவரசர் அல்-வாலீத் பின் தலால் தனது மகள் கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். ம்ம்

முன்னதாக சவுதி அரேபியா இளவரசர் அல்-வாலீத் பின் தலால் தனது மகள் கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். ம்ம்