ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேண் விபத்து ஒருவர் படுகாயம்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
டைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேண் ஒன்று வி பத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு வீதியின் குயில்வத்தைபகுதியிலே 18.06.2018 காலை 7.15 மணியளவில் பாதையை விட்டு விலகி தேயிலை மலையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

அட்டனிலுள்ளை ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற போது சீரற்ற கால நிலையினால் பாதையில் காணப்பட்ட வலுக்கல் தன்மையினால் வலுக்குச்சின்று விபத்து இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துடன் வேணில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையென்றும் வேண்சாரதி காயமடைந்து வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -