மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை வெளியிடுவதனால், தற்பொழுது நடைபெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்குகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என சட்ட மா அதிபர் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து விடுத்திருந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவித்தலை சட்ட மா அதிபர் வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 118 பேரின் பெயர் விபரம் உள்ளதாகவும், இதனைப் பெற்றுத் தருமாறும் சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சட்ட மா அதிபரிடமும் ஜனாதிபதி செயலாளரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.dailyceylon
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -