புதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது?பகுதி-1

புதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது?பகுதி-1
========================

வை எல் எஸ் ஹமீட் -
தொகுதிமுறைத் தேஒர்தலில் ஒரு தொகுதியில் எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்கின்றதோ அந்த சமூகத்திலிருந்தே ஒரு பிரதிநிதி தெரிவுசெய்யப்படுவது சாத்தியமாகும். அங்கு சிறுபான்மையாக உள்ளவர்களும் அங்கு போட்டியிடுகின்ற பெரும்பான்மை வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதே அவர்களின் வாக்குகளுக்குப் பெறுமதியாகும். வெற்றிபெறமுடியாத சிறுபான்மை வேட்பாளர் தமது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக வாக்களித்து யாரும் தனது வாக்கை வீணாக்கமாட்டார்கள்.

இது சாதாரண தொகுதித் தேர்தல்முறையின் குணாம்சமாகும். புதியதேர்தல்முறை கலப்புத் தேர்தல்முறை என்று கூறப்படுகின்றது. இது வெளிநாடுகளில் இருப்பதுபோன்ற கலப்புத் தேர்தலாயின் முஸ்லிம்களுக்கு எதுவித பாதிப்புமில்லை. சிலவேளை இன்னும் சாதகமாகக்கூட இருக்கலாம். ஆனால் இது உண்மையான “கலப்புமுறைத் தேர்தல்” அல்ல. இங்கு இரண்டு தேர்தல்கள் கலக்கவில்லை. இது தொடர்பாக பின்னர் வருகின்றேன்.

கிழக்கில் 1/3 பங்கு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தாம் வாழுமிடங்களில் செறிந்து வாழ்கிறார்கள். கிழக்கில் பெரும்பாலான முஸ்லிம்கள் அவர்களுக்காக உருவாக்கப்படும் தொகுதிகளுக்குள் உள்வாங்கப்பட்டுவிடுவார்கள். அவ்வாறு உள்வாங்கப்படாதவர்களும் அவர்களுடைய வாக்குகளை முஸ்லிம்கட்சிகளுக்கு அளிப்பதில் சிரமம் இல்லை. எனவே அவர்களுடைய விகிதாசாரத்திற்கேற்ப அங்கத்தவர்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற 2/3 பங்கு முஸ்லிம்கள் பாதிக்குமேற்பட்டவர்கள் சிதறியே வாழ்கின்றார்கள். இவர்களுக்காக முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளை விகிதாசாரத்திற்கேற்ப உருவாக்கவே முடியாது. அதாவது. முதலாவது ஐம்பது விகிதம் தொகுதிகளை முஸ்லிம்களுக்காக உருவாக்கவே முடியாது. எனவே முதலாவது தொகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்படும் பிரதிநிதித்துவத்தில் எங்களுக்குப் பாதிப்பு ஏற்படப்போகின்றது.

நமது அரசியல் பிரதிநிதிகள் இந்த சட்டமூலத்துக்கு கையுயர்த்தியபோது 2/3 பெரும்பான்மையால் எல்லைநிர்ணயக்குழு அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்; என்று நிபந்தனை வைத்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அதனை ஒரு சாதனையாகவும் குறிப்பிட்டார்கள்.

முஸ்லிம்களின் பரந்துவாழும் நிலைமைகளைப் புரிந்தவர்களுக்குத் தெரியும் எந்தவொரு தேர்தலாயினும் முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கேற்ப இலங்கையில் தொகுதிகளை உருவாக்க முடியாதென்று. இது இந்த பிரதிநிதிகளுக்குத் தெரியவில்லையா?இந்நிலையில் இந்த 2/3 பெரும்பான்மை எந்தவகையில் முஸ்லிம்களுக்கு விடிவைப்பெற்றுத்தரும்; என்று இவர்கள் நம்பினார்கள்.

ஆகக்குறைந்தது 2/3 பெரும்பான்மையால் எல்லைநிர்ணயத்தை நிறைவேற்றாமல் ஒருபோதும் இந்த சட்டத்தை அமுல்படுத்த முடியாதென்றால் அதில் ஓரளவு அர்த்தமிருக்கலாம்.

இப்பொழுது சட்டத்தின் பிரகாரம் எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்திற்கு வரும்போது 2/3 பெரும்பான்மையின்மை காரணமாக தோற்கடிக்கப்பட்டால் அடுத்த கட்டமாக சபாநாயகர் பிரதமர் தலைமையில் ஐவர் கொண்ட மீள்பரிசீலனைக்குழுவை நியமிப்பார். அந்தக்குழு தேவையான திருத்தங்களைச்செய்து இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். சமர்த்தவுடனே தாமதமில்லாது அதனை ஜனாதிபதி வர்த்தமானியில் பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன் எல்லாம் முடிந்தது. அடுத்தது தேர்தல்தான்.

இங்கு எழுகின்ற பிரதான கேள்வி அந்த மீள் பரிசீலனைக்குழுவால் எமக்கு ஐம்பது விகிதம் தொகுதிகளை உருவாக்க முடியுமா? சிதறிவாழும் முஸ்லிம்களை ஒரு இடத்தில் குடியமர்த்தி தொகுதிகள் உருவாக்குவதா? எவ்வாறு உருவாக்குவது? சிறிய மாற்றங்களை சிலவேளை செய்யலாம்.

மீளாய்வுக்குழு திருத்தங்களைச் செய்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து மீண்டுமொருமுறை 2/3 பங்கினால் நிறைவேற்றினால் மட்டும்தான் இச்சட்டத்தின்கீழ் தேர்தல் நடாத்தலாம்; என்றாவது ஒரு சரத்தை உட்புகுத்தியிருந்தால் அந்தக்கட்டத்திலாவது தடுப்பதைப்பற்றி சற்று நம்பிக்கை வைக்கலாம். ( அதுகூட உத்தரவாதமில்லை. ஏனையவர்கள் ஒன்றுபட்டால் நிறைவேற்றிவிடலாம்; இருந்தாலும் அவ்வாறு ஒற்றுமைப்பட மாட்டார்கள்; என்றாவது சற்று மனதைத் தேற்றலாம்.)

இப்பொழுது இந்த 2/3 பெரும்பான்மைச் சரத்தினால் என்ன பிரயோசனம். வேண்டுமானால் மேலும் இரு மாதங்கள் தாமதிக்கலாம். அவ்வளவுதான்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -