காரைதீவு சகா-
1985ஆம் ஆண்டுக்குப்பிறகு அம்பாறை மல்வத்தையையடுத்துள்ள மல்லிகைத்தீவு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கான மகா சங்காபிசேகம் நேற்று(7)சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அதனையொட்டிய பாற்குடபவனி நேற்று(7) காலை 8மணியளவில் மல்வத்தை சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு 3கிலோமீற்றர் நடந்து கடந்து மல்லிகைத்தீவு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் காவடி பொம்மலாட்டம் பொய்க்கால்குதிரையாட்டம் கரகாட்டம் என பல தரப்பட்ட கலாசார பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் பங்குபற்றின. அவை பார்ப்போரை கவர்ந்திழுத்தன.
அங்கு அம்மனுக்கு பால்சொரியப்பட்டது.தொடர்ந்து சங்காபிசேகம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆலயத்தின் கும்பாபிசேகம் கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்றது. தொடர்ந்து மண்டலாபிசேகப்பூஜைகள் இடம்பெற்று நேற்று(7)சனிக்கிழமை சங்காபிசேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.