9வது நாளாகத் தொடரும் பொத்துவில் தமிழ்மக்களின் நிலமீட்புப்போராட்டம்!

காரைதீவு நிருபர் சகா-
பொத்துவில் கனகர் கிராம தமிழ்மக்களது காணிமீட்புப் போராட்டம் இன்று (22) புதன்கிழமை 9வது நாளாக தொடர்கிறது.

கடந்த எட்டுத்தினங்களாக நூற்றுக்கணக்கான மக்கள் மாறிமாறி அந்தஇடத்தில் சத்தியாக்கிரகம் இருந்துவருகின்றார்கள்.

நேற்று(21) செவ்வாய்க்கிழமை கல்முனை தமிழ்இளைஞர்சேனை அமைப்பினர் பொதுச்செயலாளர் அ.நிதாஞ்சன் தலைமையில் அங்கு சென்று மக்களுடன் அமர்ந்து போராட்டத்திலீடுபட்டனர்.

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம் அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்கிறது.
போராட்டத்திலீடுபட்டுள்ள தமிழ்மக்கள் இரவுபகலாக அந்த இடத்திலேயே அமர்ந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராடப்போவதாகக்கூறியுள்ளனர்.
எனினும் நாம் செத்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர எமக்கான உறுதியான ஆவணம் கிடைக்கும்வரை இந்தப்போராட்டம் ஓயாது. இதுதானா நல்லாட்சியின் லட்சணம் ? நிலத்தைமீட்கும்வரை எமது போராட்டம் ஓயாது என்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கச்செயலாளர் வே.அருணாசலம் சூழுரைத்துள்ளார்.
அவர்களிடம் தாம் வாழ்ந்த காணிக்கான பெர்மிட் பத்திரம் தொடக்கம் உள்ள ஆவணங்களை காட்சிப்படுத்துகின்றனர்.
போராட்டத்திலீடுபட்டுவந்த கந்தையா நடேசபிள்ளை எனும் முதியவர் நோய்வாய்ப்பட்டு இடைநடுவில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -