அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
அல்லாஹவின் கட்டளையை ஏற்று தனது அன்புப் புதல்வனையே அல்லாஹ்வுக்காக தியாகம் செய்ய துணிந்த நபி இப்றாகிம் (அலை) அவர்களின் தியாகத்தினை நினைவுகூரும் சரித்திர பிரசித்தி பெற்ற இப்புனிதத் திருநாளில் முஸ்லிம்களாகிய நாம் தியாக மனப்பான்மையுடன் எமது சமுதாயத்தின் எழுச்சிக்காக உழைக்க தயாராக வேண்டும்.
இன்று நமது அரபு, முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையின்மையினால் முஸ்லிம் சமூகம் பாரிய அழிவுகளை எதிர்கொண்டு வருகின்றது. அரபு நாடுகள் தமக்குள் முரண்பட்டு, பரஸ்பரம் காட்டிக்கொடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் முஸ்லிம் உம்மா பலவீனப்பட்டு, முஸ்லிம் நாடுகளுக்குள் அந்நியர் அத்துமீறி, மனித உயிர்களை காவு கொள்கின்ற அக்கிரமங்கள் அரங்கேறி வருகின்றன.
உலகின் எந்த மூலை முடுக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அவர்கள் எமது இஸ்லாமிய சகோதரர்கள் என்ற உணர்வு ஏற்படாதவரை ஒருபோதும் அந்நியரிடமிருந்து எம்மால் விடுதலை பெற்று நிம்மதியாக வாழ முடியாது. ஆகையினால் ஹஜ் கடமை எமக்கு கற்றுத்தருகின்ற ஒற்றுமை, சகோதரத்துவம், தியாகம், பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற அனைத்து நற்பண்புகளையும் கடைப்பிடிக்க உறுதி பூணுவோம்.
உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரும் அனைத்து உரிமைகளுடனும் தலைநிமிர்ந்து வாழவதற்கான சமாதான சூழல் மலர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
