நாட்டையும் வாழும் சமூகங்களையும் வாழ வைப்பதற்கான தீர்வினை எட்டுவதற்கு தியாகங்களை முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டியிருக்கிறது.


ஏ.எல்.எம். அதாஉல்லா தலைவர்- தேசியகாங்கிரஸ்


கத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நம் நாட்டு உடன்பிறப்புக்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் தியாக உணர்வுகளோடு மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு உளம் கனிந்த ஹஜ்ஜூப்பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனுடைய உயர் சோதனையில் வெற்றிபெற்ற ஒரு குடும்பத்தின் மூன்று தியாக சீலர்களாம் அல்லாஹ்வின் தோழரான நபி இப்றாஹிம் (அலை), அவரின் துணைவியார் அன்னை ஹாஜரா (நாயகி), தவப்புதல்வன் நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் மாபெரும் தியாகம் சர்வ உலகத்திற்கும் படிப்பினையைத் தந்ததோடு, நம் முன்னவர்கள் போல் இத்தியாகம் நம்மால் நினைவுகூறப்பட வேண்டிய ஒன்றுமாகும். அன்னார்களின் தியாகத்திற்கான உயர்ந்த சண்மானமே ஹஜ்ஜூப் பெருநாளாகும். இந்நாளில் மனித குலத்தவர் வாழ்வில் தியாக உணர்வு மென்மேலும் அதிகரிக்கப் பிரார்த்திக்கிறேன்.
அரசியல் சூழ்ச்சிகளாலும் தந்திரோபாயங்களாலும் இக்கால கட்டத்தில் நாடும் வாழும் சமூகங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் சமூகம் வஞ்சகர்களாலும் ஏஜென்டுகளாகும் கிள்ளுக்கீரையாக்கப்பட்டிருக்கிறது. இவற்றை சீர் செய்து நாட்டையும் வாழும் சமூகங்களையும் வாழ வைப்பதற்கான தீர்வினை எட்டுவதற்கு தியாகங்களை முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டியிருக்கிறது. உண்மைக்காக உழைப்பதுவே அத்தியாகங்களின் முதன்மையானதாகும்.
முஸ்லிம் நாடுகளிலும் இஸ்லாத்தின் விரோத சக்திகளால் திட்டமிட்டு பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்டு யுத்த சூழ்நிலைகளும் வரவழைக்கப்பட்டு மனிதகுல அவலங்களுக்கு மத்தியிலும் நமது முஸ்லிம் உம்மத்துக்கள் இன்றைய தினத்திற்கு முகம் கொடுக்கின்றனர். புனிதமிக்க இந்நாளில் அவர்கள் அனைவருக்குமாக இருகரமேந்திப் பிரார்த்திப்போமாக!

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு புனித மக்கமா நகரம் சென்றுள்ள ஹஜ்ஜாஜிகளின் ஹஜ் கடமை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேற்றுவதற்கும் பிரார்த்திப்போமாக.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -