பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டுவரும் யஹியாகான் பௌண்டேசன், தடைகளை எதிர்கொண்டு இன்னும் இன்னும் தனது பணிகளைத் தொடரும் என்று அவ்வமைப்பினுடைய தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய அல்ஹாஜ் ஏ .சீ . யஹியாகான் தெரிவித்தார்.
பல சமூகப்பணிகளை செய்து மக்கள் மத்தியில் மிக பிரபல்லியான யஹியாகான் பௌண்டேசன் அமைப்பினது 8வது பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாகத்தெரிவும் அவ்வமைப்பினுடைய தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய அல்ஹாஜ் ஏ .சீ . யஹியாகான் அவர்களின் தலைமையில் கல்முனை காரியாலயத்தில் 20.08.2018 திகதியன்று இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த யஹ்யா கான்,
தனது சிறுவயது முதலே சமூக நல திட்டங்களில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாதாகவும் அந்த காலகட்டத்தில் கூட தன்னால் முடிந்த பணிகளை செய்து வந்தததாகவும் காலப்போக்கில் யஹியாகான் பௌண்டேசனின் பணிகளை விஸ்த்தரித்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்தகால நிறுவகம் பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் என எதிர்பார்த்ததாகவும் அவர்களால் தான் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாமல் போனதாகவும் அதன்காரணத்தால் புதிய நிருவாகத்துக்குள் புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளதாகவும் அவர்கள் சிறந்த பணிகளை இனம்கண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தங்கள் தங்களுக்கு தனிப்பட்ட கட்சி அபிலாஷைகள் உள்ளபோதிலும் அவைகளை தாண்டி சமூக நலத்திட்டங்களில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பிரதேசம் அரசியல்வாதிகள் ஊடாகவும் பல்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தேவையுடன் இருப்பதாகவும் அவைகள் நிறைவேறாமல் இருப்பதாகவும் எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற மனநிலையில் இருந்து மக்கள் மாறிவருவதாகவும் எதிர்கால சமூகத்துக்கு வெறுமையை விட்டுச்சென்று விடாது இருக்கும் காலத்துக்குள் முடிந்ததை செய்வதற்கு ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
பிரதி அமைச்சர் ஹரீஸிடம் சிறந்த வேலைத்திட்டங்கள் உள்ளதாகவும் அவருடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் அறிகூவல் விடுத்தார்.
இந்நிகழ்வின் போது கடந்த வருடத்திற்கான கூட்டரிக்கை மற்றும் கணக்கறிக்கையினை சபையில் பிரஸ்தாபித்து அங்கத்தவர்களின் ஏகமனதான அங்கீகாரத்தினை பெற்றதன் பின்னர் நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாகத்தினராக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக ஏ.சீ. யஹியாகான், சிரேஸ்ட பிரதித் தலைவராக ஏ.எல்.றசீட் , பிரதித்தலைவர்களாக ஏ.சீ. ஜின்னாஹ், ஏ.சீ.அன்வர் சதாத் ,ஏ.எம். வஹாப், எம்.ஐ. பைசால், எஸ்.கே.எம். இர்ஷாத்கான், எஸ்.எம்.அஸ்ரப், ஏ.எல்.நியாஸ் மற்றும் டீ.கே .ஹசன் ஆகியோர்களும் செயலாளராக ஏ.சீ.எம். றியால் உப செயலாளராக எம்.ஏ.எம்.ரஷ்பாஸ் பொருளாளராக எஸ்.நிப்ராஸ் உபபொருளாளராக ஆர்.எம்.இம்தாத், கொள்கைபரப்பு செயலாளர்களாக எம்.வீ.எம்.சியாம், எம்.எம்.அமான் ,ஏ.எல்.எம்.பாசில், எம்.எம்.ஏ.மஜீத் மற்றும் எம்.எம்.நிலாம் ஆகியோர்களும் ஊடக செயலாளராகவும், பிரதித்தலைவர்களில் ஒருவராகவும் எம்.வை.அமீர், ஊடக இணைப்பாளராக எம்.ஏ.அஸ்வர் மற்றும் அமைப்பாளர்களாக ஏ.எல்.லாபிர், என்.எம்.என் .ஜிப்ரி, எஸ்.எம்.றுசைன், கணக்கு பரிசோதகர்களாக ஆர்.எம்.இர்பாத் மற்றும் டீ.எல்.எம்.இல்யாஸ் பெண்கள் அமைப்பாளர்களாக ஏ.சீ.சியானா மற்றும் ஏ.எல்.எப்.சர்பானா ஆகியோர்களும் ஆலோசகர்களாக எம்.எம். பைசர், யு.எல்.எம்.ரஸ்ஸாக் , ஏ.எல்.சீனந்துரை, ஏ.பௌஸ், எம்.வை.எம். ஹுசைன், பீ.எம்.சமீம், எஸ்.எல்.யூசுப் மற்றும் எஸ்.பாரிஸ் ஆகியோர்களும் செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எம்.எம். அஜ்மீர், எம்.எம்.பஷ்பாக், ஐ.ஆதம்பாவா, எஸ்.எம்.றியாஸ், எம்.எச் .எம்.அனீஸ், எஸ்.எச்.சஹ்றான், எம்.எம்.ரிஸ்வான், எம்.எஸ்.எம்.சும்ரி, எம்.எம்.ஏ.சாஜித், ஏ.ரிகாஸ், யு.எல்.சாதிர், ஏ.எம்.ஹஸ்ஸான், ஏ.எம். நிசாத், மற்றும் எம்.எல்.எம்.ஜெசீர் ஆகியோர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
மேலும், தலைவர் உரையாற்றும் போது நடப்பு வருடத்தில் இடம்பெறவிருக்கின்ற சமூக பணிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன் கடந்த வருடங்களில் சமூகப்பணிகளில் பாடுபட்ட அங்கத்தவர்களை பாராட்டியதோடு இந்த வருடமும் அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி பல செயத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என குறிப்பிட்டார். மேலும் முதற்கட்டமாக நான்கு வறிய குடும்பங்களை இனக்கண்டு அவர்களுக்கு தலா 25000 வீதம் பகிந்தளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.