இறையருள் நிறைந்திங்கு – பாவக்
கறைகளும் மறையட்டும்
குறையிலா வளங்கள் சேர்ந்து – மனக்
குகை இருள் நீங்கட்டும்
வரைமுறை எல்லைதாண்டி – உறவு
திரை கடல் தாண்டட்டும்
கரைந்திட்ட காலமெல்லாம் – இனி
கனவைப் போல மறையட்டும்
கவலைகள் ஒழியட்டும்
கல்புகள் விரியட்டும்
கருணை தருவில் இனி
கனிவு மலர் மலரட்டும்…
பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ஹஜ்ஜு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ஏ.சீ.யஹ்யா கான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளரும் பிரபல தொழிலதிபரும்