இறை பொருத்தத்தினை வேண்டியவர்களாக இத்திருநாளின் கண்ணியத்தினை மேம்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைதல் அவசியமாகும். பல்லின மக்களான பௌத்தர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வாழும் இலங்கைத் திருநாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலைத்தோங்க இத்தியாகப் பெருநாள் தினத்தினில் இறைவனிடத்தில் பிராத்திப்போம்.
உலக முஸ்லிம்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் பல்முனைச் சதிகளால் சிதறடிக்கபடுவதினை நாம் அவதானித்துக் கொண்டிருக்கிறோம். ஆயுதங்களாலும், இனவாத சிநதனைகளினாலும் எமது மக்கள் நாள்தோறும் அவதியுறுகின்றனர். இவ்வாறான சூழ்நிலைகளை போக்கி விட்டுக் கொடுப்பும், சகிப்புத்தன்மையும் எம்மிடத்தில் மேலோங்க வேண்டும்.
தியாகத்தின் பெருநாளாக கொண்டாடப்படும் இப்புனிதமிக்க தினமானது விட்டுக் கொடுப்பின் மூலமாகவே உருவானதினை நாம் அனைவரும் அறிவோம். மானிட வர்க்கம் எனும் அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமின்றி உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி ஒற்றுமையின் அடையாளமாக ஹஜ் கிரிகைகளை புரிகின்றனர். இதுவே சமாதானத்தினதும், நல்லிணக்கத்தினதும் முதல் படியாகும்.
இவ் வரலாற்றின் படிப்பினைகளை நாமும் புரிந்து கொண்டு, அதன் தூய்மையான எண்ணத்தினை நடைமுறைப்படுத்தும் நோக்கினில் இன, மத, மொழி வேறுபாடற்ற சமத்துமிக்க நாட்டினை கட்டியெழுப்ப முன்வரல் வேண்டும். இதற்காக தங்களது உயரிய சிந்தனையினை செயற்படுத்த இத்தியாக திருநாளிலிருந்து அனைவரும் முயற்சி செய்வோம்.
அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துகள்
அதாஉல்லா அகமட் ஸகி
மாநகர முதல்வர்
மாநகர சபை
அக்கரைப்பற்று.
