பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபின் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச் செய்தி


ல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட இந்த புனித நாளில் ஒவ்வொரு முஸ்லீமும் பிரார்த்திப்பது இன்றைய நாளில் தமது கடமையாகும் என திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியிலயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

இந்த புனித நாளில் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் எனது இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்.

இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை) நபீ இஸ்மாயீல் (அலை) மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.

லட்சோப லட்சம் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு புனித மக்கா நகரிலும் அரபா பெரு வெளியிலும் பிராத்தனை செய்யும் இந்நாளை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை இறைவன் எங்களுக்கும் வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ் கடமையைநிறைவேற்றுவதற்கு புனிதமக்காசென்றுள்ள ஹஜ்யாஜ்களின் ஹஜ் கடமை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கும் பிரார்த்திப்போமாக. ஆமீன்.

இத்தருணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது கேரள மக்களை நினைவுகூர்ந்து அவர்களின் துயர்நீங்கவும், சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் விடிவெள்ளியாக தெரிகின்ற துருக்கி தேசத்தின் பாதுகாப்புக்கும் பொருளாதார உறுதிப்பாடுக்கும், எமக்கு என்றும் ஆதரவாக உள்ள அரபு தேசங்களின் ஒற்றுமைக்கும் பலத்துக்கும் ஏக இறைவனிடம் இருகரம் ஏந்தி பிராத்திப்போம்.

அத்துடன் பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட இந்த ஈகைத் திருநாளில் ஒவ்வொரு முஸ்லீமும் பிரார்த்திப்பதோடு இந்த இனிய நாளிலும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழும் பலஸ்தீன், சிரியா, ஈராக் சகோதர சகோதரிகள் உட்பட அனைத்து மக்களையும் எமது துஆக்களில் சேர்த்துக்கொள்வோம்.

மேலும் ஹஜ் புகட்டும் பாடத்தை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக்கொண்டு எமது வாழ்விலும் கடைப்பிடித்து எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த இருப்பினை இந்த நாட்டில் ஏற்படுத்த நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக பாடுபட முன்வருவோம்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள ‘ஈதுல் அழ்ஹா’வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -