குழப்பத்தை உண்டுபண்ணும் கோளாறு உள்ளவர்களுக்கு தொடர்ச்சியா ன புனர்வாழ்வளிக்க வேண்டும்


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத் 

நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் குழப்பத்தைத் தூண்டி வன்முறைகளில் ஈடுபட்டு அழிவுகளைத் தோற்றுவிக்க புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் ஆயுததாரிகள் சிலர் விரும்புகிறார்கள், அவர்களை அரசாங்கம் மீண்டும் தொடர்ச்சியான மனநலக் கோளாறுப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என தான் அரசாங்கத்தைக் கோருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன்; ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார்.
இது விடயமாக முன்னாள் முதலமைச்சர் புதன்கிழமை 20.08.2018 வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தத்திற்காக எல்.ரீ.ரீ.ஈ இனர் பயன்படுத்திய ஆயுதங்கள் முஸ்லிம்களின் கைவசம் மாறியுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் ஆயுததாரிகளில் இன்னமும் மனநிலையில் கோளாறுள்ள ஒரு சில நபர்கள் புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர்.
இது எதனை வெளிப்படுத்துகின்றது என்றால், குறித்த நபர்கள் இன்னமும் முழுமையாகப் புனர்வாழ்வளிக்கப்படவில்லை என்பதையும் அவர்கள் மன நலக்கோளாறுகளுக்கான விசேட புனர்வாழ்வுக்கு உட்படுத்தாப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.
எனவே, அரசாங்கம் இத்தகைய மனநலக் கோளாறுள்ள முன்னாள் ஆயுததாரிகளை இனங்கண்டு அவர்களை முழுநேரக் கண்காணிப்பில் வைத்து முழுமையான புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இல்லையேல், இத்தகைய நபர்களால் மீண்டும் நாட்டில் சமூகங்களுக்கிடையில் அநாவசியமான குழப்பங்களும் அழிவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டத்தினால் நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் ஈடு செய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றார்கள்.
குறிப்பாக நேரடியாகவே தமிழ் சமூகம் இழந்தவைகள் ஏராளம். அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்கு இன்னும் எத்தனையோ காலங்கள் எடுக்கும் என்ற கவலையோடு சமூக நன்னோக்காளர்கள் ஆதங்கப்படும்போது ஒரு சில சமூக விரோதிகளான இத்தகைய நபர்கள் மீண்டும் பாதிக்கப்பட்ட இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.
தமிழ் சமூகத்தின் சிந்தனை அரசியல்வாதிகள் சமூக உறவைக் கட்டி வளர்ப்பதிலும் தமிழ் பேசும் மக்களுக்கிடையிலான இன ஐக்கியத்தைக் கட்டி வளர்ப்பதிலும் அக்கறையாய் இருக்கும் பொழுது இத்தகைய சமூக விரோதிகளின் தூண்டுதல்கள் சிறுபான்மையினருக்குள் குழப்பத்தை உருவாக்கி பேரினவாத அடக்குமுறைகளுக்கு அதரவு தந்து விடும் என அஞ்சவேண்டியுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் தமிழ் பேசும் சிறுபான்மைச் சமூகங்களின் ஒற்றுமை சீர்குலையா வண்ணம் ஐக்கியப்பட்டுழைப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு மாகாணத்தை ஒரு மித்து ஆட்சி நடாத்திக் காட்டியிருக்கின்றது.
தொடர்ந்தும் தமிழ் பேசும் சமூக மக்களின் ஒற்றுமையைக் கட்டிக் காப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உறுதியாக உள்ளன.
எனவே, விசமிகளினதும், சமூக விரோதிகளினதும் சித்தப்பிரமையான இனத்துவேசக் கருத்துக்கள் குறித்து தமிழ் பேசும் சமூகங்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து எதிர்வினையாற்ற வேண்டும்.
இத்தகைய நாசகாரர்களை சமூகத்திலிருந்து புறந்தள்ளி வைக்க வேண்டும்.
அதேவேளை, பொறுப்புள்ள ஆட்சி என்ற வகையில் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -