முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்
புனித மக்காவில் நாடு, நிறம் மற்றும் பேதங்களை மறந்து இஸ்லாமியர் என்ற ஒரே கொள்கையுடன் இறைவனுக்காக இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி நமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள இன்றைய நன்னாளில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாகவும், ஐக்கியத்துடன் சகோதரத்துவ வாஞ்சையுடன் ஒரு முன்மாதிரியான சமூகமாக திகழ்வதற்கு உறுதி பூணுவோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் நபி இப்றாகீம்(அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவு கூரும் இவ்வேளையில் முஸ்லிம்கள் தங்களது தியாக உணர்வையும் மேலும் மெருகூட்டுவதுடன், சக மனிதனுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்லாம் கூறுகிறன. இன்று நம்மிடையே ஏராளமனனோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்கையைக் கடத்திக் கொண்டிருப்பதை இந்தத் தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்றைய ஈகைத் திருநாளில் முஸ்லிம்கள் அனைவரும் இத்தகைய உயர் பண்புகளைப் பேணி, ஒற்றுமையாகவும், ஐக்கியமாகவும் இந்த நன்னாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய ஹஜ்ஜூ பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன்.