அவர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கை முஸ்லிம்கள் இன்று ஒருவகையான அச்சத்தில் வாழும் சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.அண்மைக்காலமாக முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.நாலா பக்கமும் இனவாத தாக்குதல்களுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.உயிர் மற்றும் சொத்து இழப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நாட்டை நேசிக்கும் -இந்த நாட்டுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாத முஸ்லிம்கள் இந்த அசாதாரண சூழலை விரும்பவில்லை.ஏனைய இன மக்களுடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர்.நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து வாழுகின்ற முஸ்லிம்கள் வரலாற்று நெடுகேயும் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணியே வருகின்றனர்.
இருந்தாலும்,அரசியல் இலாபம் தேடும் சில தீய சக்திகள் இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி-முஸ்லிம்களை பலி கொடுத்து தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றன.இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நாம் அரசியல்ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.சில விடயங்களில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம்.இருந்தாலும்,முஸ்லிம்கள் மனதில் ஒருவகையான அச்சம் குடிகொண்டிருப்பதை மறுக்க முடியாது.
மலர்ந்திருக்கும் இந்தப் புனித ஹஜ் பெருநாள் முஸ்லிம்களின் இந்த அச்சத்தை முழுமையாக நீக்கி அவர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு வழியேற்படுத்த வேண்டும்.நிரந்தர தீர்வை கொண்டுவர வேண்டும்.
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக போராடும் எம்போன்ற அரசியல் தலைவர்களின் போராட்டத்துக்கு அல்லாஹ் வெற்றியைத் தர வேண்டும் என்றும் அணைத்து முஸ்லிம்களின் வாழ்விலும் நிலையான சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் நான் இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.-எனக் குறிப்பிட்டுள்ளார்.