கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ .எல்.எம். நசீர் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி




ன்றைய தினம் ஈதுல் அழ்ஹா ( தியாகத்திருநாளை ) கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.
புனித மக்கமா நகரில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய திருப்தியோடு நாம் உங்களோடு இணைந்து இப்பெருநாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
விஷேடமாக நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், மக்களின் சகஜ வாழ்க்கைக்காகவும் நமது பிரார்த்தனைகள் என்றும் இருக்கும்.
நமது மக்களின் துயர் நீக்கவும், சகல பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். அதேவேளை நாம் இத்தியாக தினத்தில் இருந்து எமது வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை கொண்ட , சகோதரத்துவ வாழ்க்கை முறைமையை வாழ்வதற்காக திட சங்கல்பம் பூணவேண்டும்.
மக்களின் உரிமைகளையும் , அபிவிருத்திப் பணிகளையும் நிறைவேற்றும் நோக்கோடு அரசியலில் பயணிக்கும் எமது தலைமை அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களது வழிகாட்டலில் பல சாதிகளையும் தாண்டி, ந மது
சமூகத்தின் இயக்கமானது  வெற்றி நடை பூணுகின்றது. இதற்காக நாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இக்குறுகிய காலத்தில் அரசியலில் நாம் பல அதிகாரங்களையும், நிலைகளையும் தாண்டியுள்ளோம். இதற்காக நாம் பல படிகளையும், சதிகளையும் கடக்க வேண்டியிருந்தது. இதன் போதெல்லாம் நம்மோடு உறுதுணையாயிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நமது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றோம்.

ALM .நசீர் (பா.உ)
முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -