இருந்த போதிலும் இவற்றுக்கு ஒரு தீர்க்கமான முடிவை காண வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றார்கள் அப்படி ஓருசிலர் முயற்சி எடுத்தாலும் அவர்களும் அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸை விட்டும் தூர விலகி தாங்கள் சர்ந்திருக்கும் அமைப்பு அல்லது இயக்கத்தின் கருத்தையே நியாயப்படுத்த முனைகின்றனர். இஸ்லாம் முழுமைப் படுத்தப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்னும் இப்பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முடியாமல் இருப்பது நம் சமூகத்தின் மார்க்க ஞானசூன்யத்தையே பறைசாற்றி நிற்கின்றது.
தலைப் பிறை சம்மந்தப்பட்ட விவகாரத்தில் கடந்த ஹிஜ்ரி 1434ம் வருடம் மிகவும் முக்கியத்துவம் வாய்த ஆண்டாக தடம் பதித்திருந்தது. அன்று ஒரே தலைமைத்துவத்தின் கீழ் செயல்படுகின்ற அகில இலங்கை உலமாசபையின் பல கிளைகள் தலைமைத்துவத்தினை மீறி செயல்பட்டன இது அவர்களின் இறையச்சமிண்மையைப் பிரதிபலிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
நோன்புப் பெருநாளைப் பொறுத்தவரை அது பிறையுடன் மாத்திரம் சம்மந்தப்பட்ட ஒரு விடயம் ஆதலால் அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு தினங்களில் பெருநாள் அனுஷ்டிக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஹஜ்ஜுPப் பெருநாள் அப்படியல்ல அது காலத்துடனும் (துல்-கஃதா, துல்-ஹஜ்) பிறை (துல்-ஹஜ் ஒன்பது, பத்து பதனொன்று) மற்றும் இடத்துடனும் (அரபா, முஷ்தலிபா, மினா, கஃபா) சம்மந்தப்பட்ட விடயமாகும் அதாவது மக்கா அரபாவில் ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 09 ல் ஒன்று கூட வேண்டும் அதனைத் தொடர்ந்து வருகின்ற துல்ஹஜ் 10ம் நாள் முழு உலக முஸ்லிம்களுக்கும் பெருநாளாகும் அவ்வாறே ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடுகின்ற அரபாவுடைய தினத்தில் ஹாஜிகள் தவிர்ந்த உலக முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் எனவே குறித்த வருடம் 10ம் மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடினார்கள் என்பதையும் அதற்கு அடுத்த நாளாகிய 10ம் மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை பெருநாள் அனுஸ்டித்தார்கள் என்பதையும் முழு உலக மக்களும் தொலைக்காட்ச்சிகள் மூலம் நேரடி அலைவரிசையில் மிகவும் துல்லியமாக பார்வையிட்டார்கள் இது இப்படி இருக்க எமது நாட்டில் 10ம் மாதம் 16ம் திகதி புதன் கிழமை எந்த அடிப்படையில் பெருநாள் அனுஷ்டிக்கப்பட்டது? நோன்புப் பெருநாள் விவகாரத்தில் உலமா சபையுடன் முறன்பட்டவர்களின் இஸ்லாதமிய அறிவு ஹஜ் பெருநாள் விடயத்தில் என்ன ஆனது என்பதை சிந்தித்துப் பாருங்கள் ஆக மொத்ததில் மார்க்க அறிவில் நம் சமூகம் அதள பாதளத்திலேயே இருந்து கொண்டிருக்கின்றது என்பதையே இவைகள் உறுதிப்படுத்துகின்றன.
நம் சமூகம் இஸ்லாமிய அறிவில் ஓரளவேனும் முழுமை பெற்றிருந்திருந்தால் எப்பொழுதோ எமக்கென்று ஒரு இஸ்லாமிய நாட்காட்டி (கலண்டர்) யினை உருவாக்கியிருப்பார்கள்.
எனவே இவ்வருடமாவது ஹாஜிகள் மக்கா அரபாவில் ஒன்று கூடுகின்ற நாளாகிய துல்ஹஜ் பிறை 09 ல் நோன்பு நோற்று அதனைத் தொடர்ந்து வருகின்ற துல்ஹஜ் 10ம் நாள் முழு உலக முஸ்லிம்களுடனும் நாமும் பெருநாள் அனுஷ்டிக்க அகில இலங்கை உலமா சபை ஆவன செய்யுமா?
முனாப் நுபார்தீன்-ஜே.பி
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.