முஸ்லிம் விவகார அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் மௌலானாவின் பெருநாள் வாழ்த்து


லகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்கு இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் என்று முஸ்லிம் சமய விவகார அமைச்சின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசாரச் செயலாளருமான அஸ்வான் ஷக்காப் மௌலானா வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர்.
அரபு, முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற உள்ளக முரண்பாடுகள் மற்றும் போராட்டங்களை மேற்குலக நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரபு, முஸ்லிம் நாடுகளுள் ஊடுருவி இஸ்லாமிய உலகின் பலத்தை அழித்தொழிக்கும் சதிகளை அரங்கேற்றி வருகின்றன.

அதேவேளை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற பல நாடுகளில் முஸ்லிம்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் இலங்கையிலும் முஸ்லிம்கள் கல்வி, கலாசார, பொருளாதார துறைகளில் நசுக்கப்பட்டத்தை மறந்து விட முடியாது. எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அத்தகையதொரு கொடூர ஆட்சி மீண்டும் தலைதூக்காத்திருக்க இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம்.

ஆகையினால் ஹஜ் எமக்கு கற்றுத்தருகின்ற பேதமற்ற ஐக்கியம், சமத்துவம் எனும் கோட்பாட்டை அடியொற்றி அரசியல் மற்றும் மார்க்க, இயக்க கொள்கை வேறுபாடுகளைக் களைந்து தேசிய ரீதீலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம் உம்மத் முழுமையாக ஒற்றுமைப்பட்டு- பலமடைவதற்கு உறுதி பூணுவோம். ஈத்முபாரக்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -