இஸ்லாமிய வரலாறு மிக நீண்டது. தியாகங்களாலும், இரத்தத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட இந்த மார்க்கம் வரலாறு நெடுகிலும் தியாகங்களினாலேயே வளர்க்கப்பட்டு இருக்கிறது. பொறுமையினையும் இணைந்து போதலையும் சொல்லித் தருகின்ற இஸ்லாம் வாழ்வின் நிலையாமை பற்றியும் கூறாமல் இல்லை.
இப்ராஹிம் (அலை) அவர்களின் மனிதத்துவத்திற்கு கட்டுப்பட முடியாத பல மடங்கு பெரிதான பொறுமையும், இஸ்மாயில்(அலை) அவர்களின் ஈடு இனையற்ற இணைந்து போதலும், அன்னை ஹாஜராவின் சோதனைக்குட்படுத்தப்பட்ட தாய்மை உணர்வும் நமக்கெல்லாம் படிப்பினைகள். துயரங்கள் என்பதும் இழப்புகள் என்பதும் நமக்கு பழகிப்போனவை.
அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் என்ற தக்பீர் முழக்கம் நமக்கு இறைகட்டளை, வேதம், வாழ்வு மாற்றங்களுக்கான ஒரே வழி. எனவே, இந்தத் தியாகத் திருநாள் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் மனைகள் தோறும் மகிழ்ச்சியோடும், கண்ணீரோடும் வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் எனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.
