தியாகத் திருநாளை கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இனிய ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்க ள்.


பிரதியமைச்சர் காதர் மஸ்தான். 
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு இறைத்தூதரின் தியாகத்தையும் அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும் எண்ணிப் பார்க்கையில் எம் கண்களிலும் கண்ணீர் துளிர்க்கத்தான் செய்கிறது.
ஐயாயிரம் வருடங்களுக்கு முன் நடந்த அந்த தியாகத்தை ஒவ்வொரு வருடமும் எம்மை கடந்து செல்கின்ற ஹஜ் பெருநாள் ஞாபகமூட்டி செல்கிறது.
அந்த தியாக நபியின் வழி வந்த நாம் எமக்குள் இறை நம்பிக்கை,பொறுமை, தியாகம்ஆகிய உயரபண்புகளை பேணிக் கொள்ள வேண்டும்.

சகோதரத்துவ இனங்களோடு முன்மாதிரியாக நடப்பதுடன் ஈகை,தயாளம் ஆகிய அறப்பண்புகளோடு அவர்களை அரவணைத்து இஸ்லாம் கூறும் தூய சிந்தனைகள் மூலம் எம்மைப் பற்றிய நல்லெண்ணங்களை உருவாக்க பாடுபட வேண்டும்.

இந்த நல்ல நாளில் நாட்டிலும் உலகெங்கிலும் சாந்தியும் சமாதானமும் நிலவ அல்லாஹ்த்தஆலாவிடம் மனமுருகி பிரார்தனை புரிவோமாக!
இனிய சோபனங்களுடன்.

காதர் மஸ்தான்,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,
மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -