2018 உலக குடியிருப்பு தினம் மற்றும் குடியிருப்பு வார கொண்டாட்ட நிகழ்வுகள்


அஷ்ரப் ஏ. சமத்-

2018ஆம் ஆண்டின் உலக குடியிருப்பு தினம் அக்டோபர் மாதம் முதலாவது திங்கட்கிழமையில் இடம்பெறுகிறது. 1985 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத்தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட 40-202 ஆவது தீர்மானத்தின்படி 1986 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமையை உலக குடியிருப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாச அவர்கள் ஜக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிப்பதில் முன்னோடியாக விலங்கினார். அதில் இருந்து இலங்கை 1986 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 31 வருடகாலமாக உலகில் ஏனைய நாடுகளுடன் மிகவும் பயனுள்ள குடியிருப்பு வேலைத்திட்டமொன்றின் மூலம் உலக குடியிருப்பு தினத்தினை கொண்டாடுகிறது.

ஒவ்வொரு வருடமும் குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு ஜக்கிய நாடுகள் சபை பல்வேறு தொனிப்பொருட்களை முன்வைக்கிறது. அந்த வகையில் இவ்வாண்டுக்கான உலக குடியிருப்பு தினத்திற்கான தொனிப்பொருள் “நகர சபை அதிகாரப் பிரிவினுள் திண்மக் கழிவுப் பொருள் அகற்றல் முகாமை” என்பதாகும்.கடந்த காலங்களை போன்று ஜக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் இந்த தொனிப் பொருளினை இலங்கை குடியிருப்பு அபிவிருத்தியுடன் இணைந்ததாக குடியிருப்பு தின வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது இந்த வருடத்திலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த சில வருடங்கலாக இலங்கையில் உலக குடியிருப்பு தினமானது ஏதேனும் ஒரு தேர்தல் தொகுதியினை பிரதானமாக கொண்டு மாவட்டமும் உள்வாங்கப்படும் விதத்தில் நாடலாவிய தேசிய வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி 2018 உலக குடியிருப்பு தின கொண்டாட்டம் நிகவெரட்டிய தேர்தல் தொகுதியினை பிரதானமாகக் கொண்டு குருநாகல் மாவட்டத்தின் ஒன்றினைந்த வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி அக்டோபர் மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறும் உலக குடியிருப்பு தின தேசிய மாநாடு நிகவரெட்டிய தேர்தல் தொகுதியில் புதிய மாதிரிக் கிராமம் ஒன்றினைத் திறந்து வைத்து கோலகலமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதற்கு சமாந்திரமாக குடியிருப்பு வாரத்தினுள் மற்றும் அந்த காலகட்டத்தினுள் குருநாகலை மாவட்டத்தில் விசேட வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதசாவின் என்ணக்கருவில் 2020ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் 2500 மாதிரிக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இத் திட்டத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களது அனுமதியும் ஆலோசனையும் உரிய நிதியுதவியும் அமைச்சர் சஜித்பிரேமதாசதாவின் தலைமையின் கீழ் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 25 மாவட்டங்களிலும் 150 மாதிரிக் கிராமங்களை அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளார் அத்துடன் சகல மாவட்டங்களிலும் 1100க்கும் மேற்பட்ட மாதிரிக்கிராமங்களது நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்க்பட்டுள்ளன. இத் திட்டங்களுக்காக இலவசமாகவே வீடற்ற குடும்பங்களை மாவட்ட வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்கள் தெரிபு செய்து அரச காணித்துண்டுகள் (7-15பேர்ச்) வரை பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இக் கிராமங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொறியில் பிரிவின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களது ஆலோசனையுடனும் மற்றும் வீடமைப்புக் கடன் திட்டம், உதவித் திட்டம், என நிதியுதவிகள் வழங்கப்படுவதுடன் (25-30) குடும்பங்கள் வீடமைப்புச் சங்கங்களாக அமைக்கப்பட்டு அம் மக்கள் பங்களிப்புடனேயே இவ் வீடமைப்புத் திட்டங்கள் நாடு முழுவதிலும் நிர்மாணிக்க்பட்டு வருகின்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 150 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்துள்ளன. இவைகள் அனைத்தும் அமைச்சர் சஜித்பிரேமதாசா மற்றும் பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க ஆகியோர்களினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. ஓவ்வொரு மாவட்டக் காரியாலய ஆளனியினர்களினால் ஆக்கக் குறைந்தது 50 கிராமங்கள் அமைப்பதற்கு அமைச்சரினால் அனுமதி அளிக்கப்பட்டு அந்தந்த மவாட்ட முகாமையாளர்களுக்கு காலக்கேடும் விதித்து;ளளார். அதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊழியர்கள் பெரிதும் அர்ப்பணிப்புடன் இவ் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ் வீடமைப்புத திட்டங்களில்; சகல அடிப்படைவசதிகளும் கொண்ட வீட்டுத்தோட்டம், உள்ளக பாதை வசதிகள், மின்சாரம், குடிநீர், மதவழிபாடு நிலையம் போன்ற வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

அத்துடன் இக் கிராமங்களில் வாழும்; இளைஞர் யுவதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு இலங்கை நிர்மாணத்துறை அபிவிருத்தி அதிகார சபையினால் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவும் கிராமிய வங்கியின் அனுசரனையுடன் இலகு கடன் திட்டமும் வழங்கப்படுகின்றது, ; அத்துடன் நிர்மாணத்துறை சார்ந்த மேசன் தச்சத்தொழில்களில் பயிற்சியும் வழங்கப்பட்டு உபகரணங்கள் கொண்ட பொதிகளும் இலவசமாக வழங்கப்பட்டு அரச தொழி;ற் சான்றிதல் ,என்.வி.கியு சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

இவ் வீடமைப்புத் திட்டங்களில் வடக்கு கிழக்கு மாவாட்டத்தில் யுத்த்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கான புனர் வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் அனுசரனையுடனும் வீடமைப்பு அதிகார சபை வீடுகளை நிர்மாணித்து வருகின்றது. அத்துடன் இந்திய அரசினால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 50 மாதிரிக் கிராமங்களுக்கும் நிதியுதவி வழங்கியுள்ளது ஒவ்வொரு வீட்டினை நிர்மாணிக்கவென 5 இலட்சம் ருபா நிதியும் காணியும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு மேலதிகமாக இளைஞர் கிராமம், அரச ஊழியர்கள் கிராமம், வனபரிபாலன சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் குடும்பங்களது வீடுகள் யானைகளினால் சேதமாக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்பு, ரணவிரு வீடமைப்பு போன்ற பல வீடமைப்புத் திட்டங்கள் ”செமட்ட செவன ”வீடமைப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேற்படி வீடமைப்புத் திட்டங்கள் கொழும்பு, கண்டி போன்ற மாநகரப் பிரதேசங்களில் அரச காணிகள் அரவே இன்மையால் இவ் வீடமைப்புத்திட்டங்களை இங்கு ஆரம்பிக்க்படவில்லை. நகர்புரங்களில் வீடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சேரி வீடுகள், முடுக்கு வீடுகளை அகற்றி மீள் குடியேற்றுவதற்காக கொழும்பில் 23 விசேட தொடர்மாடி வீடமைப்புத்திட்டங்களை மாநகரங்கள் அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் மலையகப் பிரதேசங்களில் லயன் அரைகளை அகற்றி 6 பேர்ச் காணி யில் தனியான வீடு அமைக்கும் திட்டம் இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அமைச்சும் மேற்கொண்டு வருகின்றது. இதனை விட யு.என். ஹெபிடாட் வீடமைப்புத் திட்டம் இந்திய அரசின் வட கிழக்கு வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குடியிருப்பு வாரம்

2016 ஆம் ஆண்டு அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் அமைச்சரவை அனுமதிக்கு அமைய அனைத்து வருடங்களிலும் உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு வரும் வாரத்தினை குடியிருப்பு வாரமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதற்கமைவாக அக்டோபர் மாதம1ஆம் திகதியிலிருந்து 07ஆம் திகதி வiர் குடியிருப்பு வாரமாகும். இவ்வாறு இக் குடியிருப்பு கால எல்லையினுள் வீடு மற்றும் வாழ்விடம் உள்ளிட்ட வேறுபட்ட விடய பிரிவுகள் மற்றும் செயற்பாடுகளில் அவதானம் செலுத்தி கொண்டாடுவதற்கு கௌரவ வீடமைப்பு மற்றம் நிர்மாணத்துறை அமைச்சரின் அறிவுரையின் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கமைவாக அன்றாட தொனிப்பொருளின்; கீழ் உலக குடியிருப்பு தின மற்றும் அதன் பின்னர் வரும் வார கொண்டாட்டம் சகல மாவட்ட மட்டத்தில் நடாத்தப்படும்.


அக்டோபர் 01 திங்கட்கிழமை - உலக குடியிருப்பு தேசிய வைபவம்


இத்தினத்தில் நிகரவெட்டிய தேர்தல் பிரிவில் 30 வீடுகளைக் கொண்ட புதிய மாதிரிக்கிரமத்தினை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படும். அதே இடத்தில் உலக குடியிருப்பு தின கொண்டாட்டத்தின்; தேசிய வைபவமும் நடாத்தப்படுவதுடன் இதற்கு சமாந்திரமான நாடுபூராவும் உள்ள அனைத்து மாவாட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவாட்ட மட்டத்தில் இக் குடியிருப்பு தின கொண்டாட்டட்டங்கள் நடாத்தப்படுகின்றது. அங்கு மாவட்ட ஊழியர் குழுவினர்கள், வீட்டுப்பயனாளிகள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய பிரிவினர்களுக்கும் உலக குடியிருப்பு தினத்தின் முக்கியத்துவம் அங்கு இவ்வருடத்தின் தொனிப்பொருளுக்கு அமைய செயற்படுகின்றது. வீடு மற்றும் வாழ்விட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பாகவும், அக்டோபர் 01ஆம் தினத்;திலிருந்து எதிர்வரும் வார காலத்தினுள் செயற்படுத்தப்படும் பல்வேறுபட்ட வேலைத்திட்டம் தொடர்பாகவும் மாவட்ட மட்டத்தில் அறிவூட்டல் நடாத்தப்படுகின்றது.


அக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை - இளைஞர் தினம்


உலக குடியிருப்பு தினத்தின் இரண்டாவது தினம் இளைஞர் தினமாக பிரகடனபடுத்தப்பட்டுள்ளது. செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தில் அதிக பங்களிப்பினை வழங்குவது இளைஞர்களே. மாதிரிக் கிரமா வேலைத்திட்டத்தினுள் இளைஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. இத் தினத்தில் செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பினை வளர்ப்பதற்கும் அவர்களின் செயற்பாடுகளை மேலும் வளர்ப்பதற்காகவும் பொருத்தமான வேலைத்திட்டங்களை மாவட்ட மட்டங்களில் தெரிந்து செயற்படுத்தல் வேண்டும். அதற்கான பயிற்சி பட்டரை கருத்தரங்குகள் மூலம் கிராமிய மட்டங்களில் பிரயோக வேலைத்திட்டங்களை செயற்படுத்தப்படுகின்றது.


நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சiபின் (ஊஐனுயு) பங்களிப்பில் செயற்படுத்தப்படும் “சில்ப சவிய” வேலைத்திட்டத்திற்காக மாவாட்டத்தில் பங்களிப்புச் செய்யும் தச்சர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அதிகமாக வீடமைப்பு வேலைக்கு பங்களிப்பு செய்வதற்கு முற்படுத்துவதுக்குரிய வேலைத்திட்டம் செயற்படுத்துப்படுவதுடன் அதற்கு அவசியமான ஒத்துழைப்பினை நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை வழங்கி வருகின்றது.


அக்டோபர் 03 புதன் கிழமை - மகளிர் தினம்



செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கு அதிகமான கவர்ச்சிகரமான பங்களிப்பானது கிடைப்பது வீட்டுப்பயனாளி பெண்களிடமிருந்தேயாகும். வீட்டு நிர்மாணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டதிலிருந்து நிர்மாண செயற்திட்டத்தில் வீட்டின் உரிமையினை பெரும்வரை பெண்களின் தியாகம் மற்றும் பிரயோகம் காணப்படுகின்றது. இத் தினத்தினூடாக செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக அதிகமாக பெண்களின் உதவி பங்களிப்பினை போன்று அவர்களின் பங்களிப்பினூடாக செயற்படுத்தப்படும் பல்வேறுபட்ட நிகழ்வுகளை செயற்படுத்தப்படுவதற்கு மாவட்ட மட்டத்தில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். வீடமைப்பு தொடர்பாக மகளிரை அறிவூட்டல் இவ் வேலைத்திட்டத்தின் ஊடக நடாத்தப்படும். நிகழ்வுகள் தொடர்பான புரிந்துணர்வினை வழங்குதல் போன்றன இத் தினத்தில் அதற்கான பொருத்தமான வேலைத்திட்டங்கள் மாவட்ட மட்டங்களில் செயற்படுத்தப்படுகின்றது


அக்டோபர் 4 வியாழக்கிழமை - வீடமைப்பு முகாமை மற்றும் உரிமை தினம்


நிர்மாணிக்கப்படும் வீட்டினை முறையான முகாமைக்கு உட்படுத்துதல் மற்றும் வீட்டின் உரிமையை வழங்குதல் வீடமைப்பு அபிவிருத்தி செயற்திட்டத்தின் அதிவிசேடமான செயற்பாடாகும் அதற்கமைய வீடமைப்பு முகாமை மற்றும் உரிமை தினத்தில் வீடமைப்பு சங்கங்களை ஒழுங்கமைத்தலும் புதிய வீடுகளை நிர்மாணித்தல் அதற்கான உத்தியோகத்தர் குழுவினை நியமித்து அவர்களுக்குரிய பொறுப்பு மற்றும் செயற்பாடுகளை ஒப்படைத்தல் தெடர்பான புரிந்துணர்வினை வழங்கப்படுகின்றது. மாவட்ட மட்டத்தில் இவ் வீடமைப்பு சங்க உத்தியோகத்தர்களை இணைத்து மாவட்ட வீடமைப்பு சங்க சம்மேளணம் அல்லது சந்திப்பினை நடாத்துகின்றது. அத்துடன் நகர்புர வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கு அண்மையான முகாமை கூட்டுத்தாபணங்களை இற்றைப்படுத்தல் மற்றும் புதிய நிர்மாணம் தொடர்பான அறிவூட்டல் சம்மேளணம் அல்லது பயிற்சிப்பட்டரைகளை அமைக்க வேண்டியதுடன் அதற்கான தலைமைகளுக்கு முகாமை அதிகார சபையின் பங்களிப்பின் பேரில் நடைபெறுகின்றது.


மேலும் இத்தினத்தில் வீட்டின் உரிமைகளை வழங்குவதற்கு விசேட அவதானத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து அங்குள்ள அனைத்து பயனாளிகளுக்கும் வீடொன்றின் உரிமையினை பெற்றுக் கொடுப்பதன் அவசியம் தொடர்பான புரிந்துணர்வினை வழங்கல் அதற்காக தம்மால் நிறைவேற்ற முடியுமான பொறுப்புக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தல் அவ்வாறே இத்தினத்தில் இயலுமான அளவு பயனாளிகளின் உறுதிப்பத்திரம் மற்றும் குத்தகை உறுதிப்பத்திரம் ஆகியவற்றை வழங்குவதற்காகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


அக்டோபர் 05 வெள்ளிக்கிழமை – அடிப்படை வசதிகள் தினம்


செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் அனைத்து மாதிரிக்கிராமங்கள் மற்றும் ஏணைய வீடுகளின் அடிப்படை வசதிகளை வழங்குவது அதிவிசேடமான விடயமாகும். பல வீடமைப்பு திட்டங்களை வீPட்டுப்பயனாளிகளிடம் ஒப்படைக்கும் பொழுது இவ் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது பெரும் சவாலாக உள்ளது. அணைத்து வீடமைப்பு வேலைத்திட்டங்களிலும் அவசியமான முதன்மை சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பாக பயனாளிகளுடன் கலந்தாலோசிப்பது , அந்த சேவை வதிகளை வழங்குவது தொடர்பாக உரிய நிறுவனங்களுடன் கருத்துக் கோரல் , கலந்தாலோசித்தல் , விலைமதிப்பீட்டினை தயாரித்தல் , அவ் ஒதக்கீடுகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றது.


அக்டோபார் 06 சனிக்கிழமை – சூழல் தினம்


குடியிருப்பு வாரத்தின் 06 ஆவது தினமாக கருதப்படும் சூழல் தினமானது இவ்வருட உலக குடியிருப்பு தினத்தின் தொனிப்பொருள் மற்றும் உரிய விடயங்களை நிறைவேற்றும் தினமாகும். செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் அனைத்து மாதிரிக்கிராமங்கள் மற்றும் ஏணைய வீட்டு வேலைத்திட்டங்களில் சூழலியல் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக் கொடுத்தல் மற்றும் சூழலினை பாதுகாத்தல் ஆகியன மிகவும் முக்கியமான நடவடிக்கையாவதுடன் இத்தினத்தில் அது தொடர்பான விழிப்புணர்வினையும் வீடமைப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ளது. இச்சூழலியல் விடயங்கள் தொடர்பாக மாவட்ட பாடசாலை மாணவர்கள் , வயோதிபர்கள் , இளைஞர்கள் ஆகிய வீட்டுப்பயனாளிகளுக்கு அறிவூட்டும் பயிற்சிப்பட்டரை , கருத்தரங்கு மற்றும் செயல்முறை வேலைத்திட்டங்கள் இத்தினத்தில் செயற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உலக குடியிருப்பு தின தொனிப்பொருளினூடாக அறியப்பட்டுள்ள திண்மக்கழிவு முகாமை தொடர்பாக இத்தினத்தில் விசேடமாக உரை நடாத்தப்பட வேண்டியதுடன் அதனை ஊக்குவிப்பதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை மாதிரிக்கிராமங்களுக்கு அண்மியதாக செயற்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு;ளளன.


அக்டோபர் 07 ஞாயிற்றுக்கிழமை – புதிய மாதிரிக்கிராமத்தின் அங்குரார்ப்பண தினம்

2018 உலக குடியிருப்பு தின கொண்டாட்டத்தின் முடிவுத்தினமான அக்டோர் 07 ஞாயிறு தினம் புதிய மாதிரிக்கிராமங்களின் அங்குரார்ப்பண தினமாக பெயரிடப்பட்;டுள்ளது. இத்தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த அளவு 04 மாதிரிக்கிராமங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு சமாந்திரமாக உரிய தினத்தில்; நாடுபூராகவும் புதிய மாதிரிக்கிராமங்கள் 100 இற்கான நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு அமைய இத்தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிய மாதிரிக்கிராமங்களை நிர்மாணிப்பதற்கு தகுதியான காணித்துண்டு நேரகாலத்துடன் இணங்காணப்பட்டுள்ளது. ,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -