கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 60 மாணவர்களுக்கு முதலுவிச் சான்றிதழ் வழங்கி வைப்பு.


நிப்ராஸ் மன்சூர்-
ல்முனை ஸாஹிரா கல்லூரி தேசிய பாடசாலையில் சென்ஜோன் அம்பியூலன்ஸ் முதலுதவிப் பிரிவினால் நடாத்தப்பட்ட “முதலுதவியாளார்” பயிற்சி நெறியினை நிறைவு செய்த 60 மாணவர்களுக்கான முதலுதவி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரி அதிபார் எம்.எஸ்.முஹம்மட் தலைமயில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாயின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சனூஸ் காரியப்பர், கௌரவ அதியாக முன்னாள் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி உப பீடாதிபதியூம் மாவட்ட ஆணையாளருமான அல்-ஹாஜ் எம்.எச்.எம்.மன்சூர், விசேட அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர் நிஸ்மியா சனூஸ், உதவி மாவட்ட ஆணையாளர் எஸ்.தஸ்தகீர், உதவி மாவட்ட ஆணையாளார் எம்.எஸ்.எம்.மிப்றாஸ்கான், பிரதி அதிபர், உதவி அதிபர் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். 
இன் நிகழ்வினை உதவி மாவட்ட ஆணையாளர் ஏ.பைசர் ஒழுங்குபடுத்தியிருந்தர்.மேலும் இந்நிகழ்வின் பிரதம அதிதி உரையாற்றும் போது எத்தனை கல்வியலாளர்களும் உருவாக்கப்படலாம் ஆனால் ஆளுமைமிக்க கல்வியலாளர்கள் உருவாக்கப்படும் போதுதான் சமூகம் போதிய பயனைப் பெறும் இவ்வாறான பயிற்சிகள் மாணவர்களுக்கு கட்டாயம் வழங்கப்பட்டு சமூகத்தில் இவர்கள் இணைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். 
மாவட்ட ஆணையாளர் எம் எச் எம் மன்சூர் அவர்கள் உரையாற்றும் போது பாடசாலையின் சகல மாணவர்களுக்கும் முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் இவ்வாறு பயிற்சி பெற்றவர்களால்தான் சமூக சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக முடியும். எமது நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது சுனாமி சேவையில் ஈடுபட்ட கல்முனை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 40 இற்குமேற்பட்ட முதலுதவியாளர்கள் தேசிய தலைமைச் சங்கத்தால் வழங்கப்பட்ட சுனாமி சேவை விருதினை பெற்றுக் கொண்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இவ்விடயத்தை தெரியப்படுத்துகின்றேன் எனவும் கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -