ஏறாவூரில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

ஏறாவூர் றிபாய்-
றாவூர் நகர பிரதேச செயலக மட்டத்தில் பல்துறைகள் போஷாக்கு திட்டத்தின் கீழ் போஷாக்கு ஆபத்துக்குள்ளான 50 விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று 04.09.2018 மீராகேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஏறாவூர் பிரதேச செயலாளர் V.யூசுப் தலைமையில் இடம் பெற்றது.
இன்நிகழ்வில் விவசாய போதனாசிரியர் மு.ஹ.முர்ஷிதா ஷிரீன் வளவாளராக பங்குபற்றியதுடன் வரட்சி மற்றும் வெள்ள காலங்களில் பயிர் செய்வது தொடர்பாகவும் நச்சற்ற உணவு உற்பத்தியினூடாக நோயற்ற வளமான சமூகத்தை உருவாக்குவதுடன்  பொருளாதார மட்டத்தினை அதிகரிப்பது எவ்வாறு என்பவற்றுடன் மண் வளத்தை பேனுவதும் அறுவடைக்கு பின்னான இழப்புகளை எவ்வாறு குறைக்கலாம் என்பதுடன் கூட்டுப்பசளை உற்பத்தி மற்றும் அதன்பயன்பாடு தொடர்பாகவும் செயன்முறையுடனான விளக்கத்தை அளித்தார்.

இதில் ஏறாவூர் பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் S.சிவலிங்கம், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜவ்பர்,பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  MA.முபாரிஸ்,M.சுபையிர்,T.விமலநாதன் A.அன்வர் ஆகியோருடன் விவசாய திணைக்கள பயிற்சியாளர் AL.சஸ்னாவும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -