க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான்அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், தமிழ் கல்வி அமைச்சருமான மருதபாண்டி ராமேஸ்வரன்அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சின் 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கண்டி, பன்வில நக்கில்ஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் மத்திய மாகாண சபை பதில் முதலமைச்சரும், தமிழ் கல்விஅமைச்சருமான மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களினால் வைபவ ரீதியாக 29.09.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் துரை மதியுகராஜா, மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்விப் பணிமனையின்உத்தியோத்தர்கள், பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள், எனப் பலரும் கலந்துக்கொண்டனர்.