கொழும்பில் புத்தாக்குனர் ஆணைக்குழுவின் 'ஆயிரம் படைப்புகள்' கண்காட்சி நடைபெறுகிறது.

காரைதீவு நிருபர் சகா-
லங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவானது ஆண்டுதோறும் நடாத்தி வரும் 'ஆயிரம் படைப்புக்கள்' 2018 எனும் தேசிய புத்தாக்க கண்காட்சி தற்போது கொழும்பில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியும் கண்காட்சியும்நேற்றுமுன்தினம் 13 முதல் நாளை 16ஆம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் வர்த்தக சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.
இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவானது ஆண்டுதோறும் நடாத்தி வரும் 'ஆயிரம் படைப்புக்கள்' 2018 எனும் தேசிய புத்தாக்க கண்காட்சிக்கு தொடர்ந்து ஏழாவது வருடமாகவும் தேசிய மட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்டதோடு இவ் வருடமும் ஒன்பது புதிய கண்டுபிடிப்புக்களுடன் யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீட முதலாம் வருட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 19ம் திகதி கிழக்கு மாகாண மட்ட போட்டிகள் மட்டக்களப்பு மகஜன தேசிய கல்லூரியில் நடைபெற்றது. இதில் இவர் பல்கலைக்கழக பிரிவில் 14 கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பித்திருந்தார்.
பாதணிகளில் தூசு படியாத உறை இலகுவாக கம்பிகளை இணைக்கும் கருவி பெரிய வாகனங்களின் சில்லுகள் மற்றும் அதிகளவான முறுக்குத்திறன் தேவையான பொருட்களை இலகுவாக கழற்றும் கருவி வினைத்திறனான நிறப்பூச்சுத் தூரிகை கழிவான பாட்டாக்களிலிருந்து மீள்சுழற்சி செய்யப்பட்ட பைவர் இரண்டு சக்கரங்களுடைய உதவியாளன் சூழல் நேய மீள்சுழற்சிப் போத்தல் வீட்டு நீர்சேமிப்புத் தாங்கியில் இருக்கும் நீரின் சுத்தத்தைப் பேணும் கருவி மற்றும் கடல் நீரின் மூலம் விவசாயம் செய்யும் முறை போன்ற ஒன்பது கண்டுபிடிப்புக்களாகும்.
சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச்சேர்ந்த இவர் ஆரம்பக் கல்வி கற்ற சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் உயர் கல்வி கற்ற சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை அதாவது இதுவரை 86 கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளார்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -