மக்கள் சக்தி பொருளாளர் மீது அச்சுறுத்தி தாக்குதல் முயற்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு


ஜே.எப். காமிலா பேகம்-
க்கள் சக்தி பொருளாளர் மீது அச்சுறுத்தி தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று (29) மக்கள் சக்தி பொருளாளர் ஜே.எப். சம்சாத் பேகம் முறைப்பாடு செய்துள்ளார்.

வாழைச் சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் அண்மையில் மக்கள் சக்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். நளிமின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் நிர்வாக குழு தலைவராக எம்.பாரூக் என்பவரும், செயலாளராக நாவலடி மாதர் சங்க தலைவி ஜே.எப்.சம்சாத் பேகமும், செயலாளராக கே. ஜிப்ரி என்பவரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

சுமார் 7 கிராமங்களைச் சேர்ந்த 900 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தலா 100 ரூபாய் அங்கத்துவ பணம் செலுத்தி மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். ஆரம்பத்தில் பொருளாளரின் கையொப்பமிட்ட பற்றுச்சீட்டுக்கள் கொடுக்கப்பட்டதுடன் பாரூக் தலைவரின் வழிநடாத்தலில் பதியப்பட்டு அங்கத்துவ பணமாக சேர்ந்த 25 ஆயிரம் ரூபாய் தலைவரினால் வங்கியில் வைப்பிலிடப்பட்டது.
ஆரம்ப தலைவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர் என்ற காரணத்தால், இரண்டாவது தலைவராக அரபா நகர் எம். ஹனிபா என்பவர் திடீரென மக்கள் தெரிவின்றி முன்நிறுத்தப்பட்டார்.

இதன் பின்பு மக்களால் கையளிக்கப்பட்ட பணம் வைப்பிலிடுவதில் இழுபறியுடன் கூடிய பல குளறுபடிகள் அரங்கேறின.

இதன் போது செயலாளர் ஜிப்ரி தலைவரிடம் மூன்று தடவை கூட்டங்களில் கணக்காய்வு செய்து பொருளாளருக்குரிய ஆவணங்களை ஒப்படைக்குமாறு மற்றும் வேண்டப்பட்டது.
பொருளாளர் சமூகம் தந்திருந்ததும் பல இடங்களில் பொருளாளர் சம்சாத் பேகத்தின் கையொப்பத்தினை தலைவர் ஹனிபாவே இட்டு மக்களிடம் பணத்தைப் பெற்றதும் பற்றுச்சீட்டுக்களை காபன் பதிவிறக்கி தன்னிச்சையாக எழுதியதும் தெரியவந்தது.
தலைவரின் தன்னிச்சையான போக்குடன் பொருளாளரின் கையொப்பமிடுவதை அறிந்து பிரதேச செயலாளரிடம் முறையிடப்பட்டது.

நேற்று (29) நடைபெற்ற நிர்வாக கூட்டத்தில் பொருளாளரின் பெயரில் அதிகார துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம் எனவும் தனது ஆவணங்களை கையளிக்குமாறு பொருளாளர் கேட்டிருந்தார்.
அதன் போது தலைவர் ஹனிபா கோபமுற்றதுடன், தகாத வார்த்தைகளால் பேசியதுடன் பொருளாளரின் கையெழுத்தை தலைவர் தனது கையால் பற்றுச்சீட்டில் வைப்பதும் தவறில்லை எனவும் கூறி தகராறில் ஈடுபட்டதுடன் கதிரையை தாக்கி அடித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து பொருளாளர் சம்சாத் பேகம் தனது பாதுகாப்பினை முன்னிட்டு வாழைச் சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நளிம் இன்று காலை பொருளாளருக்கு தொலைபேசி மூலமாக குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறும் வராவிடின் பதவியை ராஜினாமா செய்யுமாறும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -