ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் வரலாற்றை கூறும் கிரிவெசிபுர திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.



ண்டி இராஜ்ஜியத்தின் இறுதி தமிழ் மன்னனான ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் வாழ்க்கை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள 'கிரிவெசிபுர' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடல், பாடல் வெளியீடு மற்றும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், திரைப்படத்தின் இயக்குநர் தேவிந்த கோங்கஹகே மற்றும் திரைப்படத்தில் பணியாற்றிய சகலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போலியாக சித்திரிக்கப்பட்ட ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் வரலாற்றை மறுதலித்து மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளியே வரும்படி ஆய்வு செய்யப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.இந்த திரைப்படம் இலங்கையில் பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், சிங்களம் ஆங்கிலம் என மூன்று மொழிகளும் படத்தில் கையாளப்பட்டுள்ளதோடு, பாடல்கள் தமிழ் மற்றும் சிங்களம ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
படத்தில் மூன்று மொழிகளையும், மும்மதங்களையும் சார்ந்தவர்கள் பணியாற்றியுள்ள நிலையில், இத்திரைப்படம் இலங்கையில் நல்லிணக்கத்திற்கு உந்து சக்தியாக அமையுமென படத்தின் இயக்குநர் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையில் பெரும்பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆங்கில கலைஞர்கள் நடித்துள்ளதோடு இலங்கையின் பிரபல திரை நட்சத்திரங்களான புபுது சதுரங்க, நிரஞ்சனி ஷண்முகராஜா, எல்ரோய் அமலதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ் பாடல்களுக்கான வரிகளை இந்திய திரைப்படங்களுக்கு பாடல் எழுதி புகழ்பெற்ற கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

திரைப்படத்தை பெஸ்ட் லைப் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வெளியிடப்படவுள்ளது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -