அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தாகள்; சங்கத்தின் வருடாந்த ஊடகவியலாளர் மாநாடு




பி. முஹாஜிரீன்-
கடந்த ஆட்சிக் காலத்தில், 2014ம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட அரச கள உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வழங்கப்படாத மோட்டார் சைக்கிளை வழங்குவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றி, சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தாகள்; சங்கத்தின் தலைவர் கே. முகம்மட் கபீர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தாகள்; சங்கத்தின் வருடாந்த ஊடகவியலாளர் மாநாடு திங்கட்கிழமை (03) மாலை அக்கரைப்பற்று ஏசியன் செப் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

தலைவர் கே. முகம்மட் கபீர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'கடந்த அரசாங்கத்தால் சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கல் திட்டமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள 05 ஆயிரத்தி 650 கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவில்லை. இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
பல்வேறு காரணங்களால் மோட்டார் சைக்கிள் வழங்கப்படாத கள உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் பெறாமல் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி மோட்டார் சைக்கிளை வழங்கிவர்களுக்கு மேற்படி 50 ஆயிரம் ரூபாவை மீள செலுத்தப்படுமெனவும், கூறப்பட்டு இது வரையும் அவை இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர்;, தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
'அபிவிருத்தி உத்தியோகத்தர்களது சம்பளத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, உத்தியோகத்தர்களின் தரம், வகுப்பு மற்றும் கல்வித் தகைமைகள் அடிப்படைச் சம்பளத்தை நிர்ணயம் செய்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக அரச திணைக்களங்களில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் முறையான, ஒழுங்குபடுத்தப்பட்ட கடமைப்பட்டியல் இல்லாமலும் குறித்த ஒரு அமைச்சின் கீழ் செயற்படாமலும் பல்வேறு பிரச்சினைகளுடன் கடமையாற்றி வருகின்றனர். இவர்களை உரிய அமைச்சின் கீழ் ஒன்றிணைத்து, உரிய கடமைப் பட்டியலும் தயாரித்து வழங்கப்பட வேண்டும்.

அரச மற்றும் தனியார் துறைகளில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 04 மாத கால மகப்பேற்று விடுமுறையை குழந்தைகளின் பால்குடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, அவ்விடுமுறை 06 மாதங்களாக அதிகாரிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 03 சோடி புகையிரத ஆணைச் சீட்டானது, போக்குவரத்துத் தேவை குறைந்த காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்டதாகும். ஆனால் தற்போது Nவைகளும் பயணச் செலவுகளும் அதிகரித்தள்ள நிலையில் மாதாந்தம் 01 என்ற அடிப்படையில் வருடத்திற்கு 12 புகையிரத ஆணைச் சீட்டுக்களை அதிகாரித்த வழங்குவற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டும்.


வருடாந்த இடமாற்றத்தின் போது இடமாற்றக் குழு ஒன்று அமைக்கப்படுவதுடன், அதில் துறைசார்ந்த தொழில் சங்கத்தின் பங்கேற்பினையும், பிரசன்னத்தையும், நிறுவன தலைவர்கள் உறுதிப்படுத்தி தொழிற் சங்கத்தின் உரிமையை பேண வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


செயலாளர் எஸ். ஆப்தீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
எங்களது தொழிற்சங்க நடவடிக்கையை அடைக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் சில தீய சக்திகள் திட்டமிட்டு செயற்படுகின்றன. இதன் ஓர் அங்கமாக எமது தொழிற் சங்கத் தலைவர் முகம்மட் கபீரின் கார் அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, கடந்த வாரம் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இதில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது. எமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட காத்திரமான நடவடிக்கைகளை சகித்துக் கொள்ள முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களது இத்தகைய செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட் வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொழிற்சங்கத்தின் பிரதித் தலைவர் ஏ. சந்திரசேன கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -