சமய பாட ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான இலவச கருத்தரங்கு!


மௌலவி ஆசிரியர், கிறிஸ்தவ சமய பாட ஆசிரியர், கத்தோலிக்க சமய பாட ஆசிரியர், இந்து சமய பாட ஆசிரியர் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் கவனத்திற்கு!
டைபெறவுள்ள எழுத்துமூல போட்டிப் பரீட்சையில் நுண்ணறிவு பரீட்சையில் ஆசிரியர் தொழிலுக்கான தகைமைகள், தர்க்க ரீதியிலான அறிவு, தீர்மானம் எடுக்கும் இயலுமை, என்பனவும் பொது அறிவு பரீட்சையில் ஆசிரியர் துறை தொடர்பில் பொது அறிவு, தேசிய கல்வி கொள்கை போக்கு, நவீன கல்வி மயப்படுத்தல் போன்ற பாடப்பரப்பில் வினாக்கள் அமையவுள்ளது.

எனவே இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்ளுக்கு இது தொடர்பிலான பூரண அறிவை பிரபல வளவாளரும் உதவி பிரதேச செயலாளருமான எம்.ஏ.சி. அஹமட் ஷாபிர் (SLAS, LLB(R), MPA(R) அவர்களின் முழுமையான வழிகாட்டலில் முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளோம். போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சமய பாட ஆசிரியர் தொழிலுக்கு தங்களை தயார்படுத்தும் இக்கருத்தரங்கு எதிர்வரும் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி தொடக்கம் சாய்ந்தமருது பொது நூலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள எமது DMK ASSOCIATES கல்வி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

சமய பாட ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இம்மாபெரும் இலவச கருத்தரங்கில் கலந்துகொண்டு முழுமையாக பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலதிக விபரங்களுக்கு DMK ASSOCIATES 0775746881
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -