அராலி சந்தியில் இருந்து குறிகட்டுவான் வரை மாபெரும் சிரமதானம் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான்-
சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் என்பதை விழிப்புணர்வாக கொண்டு பொதுமக்கள் பெரும் சிரமதானம் ஒன்றினை இன்று (28) மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட அராலி சந்தியில் இருந்து குறிகட்டுவான் வரை குறித்த சிரமதானம் முன்னெடுக்கப்படுவதுடன் அதிகளவான பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
இச்சிரமதானத்தில் டெங்கு ஒழிப்பின் முக்கியத்துவம் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் ஊர்காவற்றுறை கிராம சேவகர் பிரிவு இராணுவத்தினர் ஊர்காவற்றுறை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -