மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

பி.எம்.எம்.ஏ.காதர்-
ரசியல் பழிவாங்கல்; காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் 23 வருடங்களின் பின்னர் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளர்;.இவர் பொலிஸ் பரிசோதகராக நியமனம் செய்யப்பட்டு நாளை திங்கள்கிழமை(2018-10-01)திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்கின்றார்.

இவர் 1988.01.18ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்று தலைமன்னார்,கல்முனைஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றினார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெ பொலிஸ் பிரிவில் கடமையின் நிமிர்த்தம் சென்று கொண்டிருந்த போது பயங்கர வாதிகள் மறைந்திருந்த தாக்கிய போது மிகவும் சாதுரியமாக தன்னுடன் பயனித்த பொலிஸ் உத்தியோகத்தர்களையும், ஆயுதங்களையும், வாகனத்தையும் பாதுகாத்தiமைக்காக உயர் அதிகாரிகளின் பாராட்டைப்பெற்று 1990-04-27ஆம் திகதி பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு பெற்றார்.

அந்தப் பதவி உயர்வுடன் பம்பலப்பிட்டி,கம்பள,மகவெல,அக்கறைப்பற்று, மருதானை,கல்முனை ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றினார். இறுதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வேளை அரசியல் பழிவாங்கல்; காரணமாக கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அங்கு கடமையாற்றிய போது சம்பளமற்ற விடுமுறை கோரி விண்ணப்பித்த போது அந்த விண்ணப்பத்தை உயர்அதிகாரிகள் அங்கீகரித்து சிபாரிசு செய்திருந்தனர்.

இந்த நிலையில் அப்போது இருந்த பொலிஸ்மா அதிபர் அமரர் ராஜகுரு 1995.10.01ஆம் திகதி இவரைப் பதவியில் இருந்து நீக்கினார்.இதன் பின்னணில் முஸ்லிம் அரசியல் வாதி ஒருவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த அரசியல் பழிவாங்கல்; தொடர்பான கோவையை அப்போதே பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்குச் சமர்ப்பித்திருந்தார்.

2001,2002ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு இது தொடர்பாக விசாரணை நடாத்திக் கொண்டிருந்த வேளை ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க ஆட்சியைக் கலைத்தார்.இதனால் இவர் எடுத்த முயற்ச்சிகள் கைகூடவில்லை.
அதனைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் இறங்கினார்.அதன் பயனாக மக்களுக்கான சேவைகளைச் செய்யக் கூடியவகையிலான பல செயற்திட்டங்களை முன்னெடுத்தார்.

அக்காலப்பகுதியில் பிரதியமைச்சராக இருந்த மயோன் முஸ்தபா,அமைச்சர்களாக இருந்த றஊப் ஹக்கீம்,அதாஉல்லா,பிரதி அமைச்சர் சரத் வீரசேகர,அமைசசர்களான பேரியல் அஷ்ரப்,றிஷாட் பதியுதீன் ஆகியோருடன் இணைந்து மருதமுனையின் முக்கிய தேவைகளை இனங்கண்டு பூர்த்தி செய்ததுடன் மக்களுக்கான பல்வேறு சேவைகளையும் இவர் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இனைந்து பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பாக உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு 3901 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டி ஐந்து வருட பதவிக்காலத்தில் கல்முனை மாநகரத்திற்கும்,மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்கினார்.இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,ஜனாதிபதியுமான மதை;திரிபால சிறினே அவர்களால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதியின் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2018.02.10ஆம் திகதி நடைபெற்ற புதிய வட்டார முறையிலான தேர்தலிலும் கல்முனை மாநகர சபையில் பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்குள் முதன்மை வாக்குகளைப் பெற்றார்.அதில் பட்டியல் மூலம் கல்முனை மாநகர சபை உறுப்பிராகத் தெரிவு செய்;யப்பட்டார்.இத்தேர்தலின் போது மருதமுனை மண்ணுக்கு முதல் முதலாக ஜனாதிபதி ஒருவரை அழைத்த வந்த பெருமை இவரையே சாரும்.

தேர்தல் முடிந்த கையோடு மருதமுனை,பெரியநீலாவணை பிரதேசங்களில் ஆறு கொங்றீட் வீதிகளை செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு வழங்கியவர். கல்முனை மாநகர சபையின் எந்த உறுப்பினர்களோ,பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ இதுவரை இவ்வாறான அபிவிருத்திகளைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஜனாதியின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண ஆளுணர் ரோகித்த போகொல்லாகம அவர்கள் ஊடாக 73பேரினது தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளர் என்பது குறிப்பிடத்க்கது.
பொது மக்களின் நன்மை கருதி மருதமுனைப் பிரதேசத்தின் அனைத்து சுனாமித் தகவல்களையும் உள்ளடக்கி 'மருதமுனையில் சுனாமி அனர்த்தம்' என்ற நூலை 2005ஆம் ஆண்டு வெளியிட்டார்.அதே போன்று பொலிஸ் சட்டதிட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 'பொலிசாரும் பொது மக்களும்'என்ற நூலை 2006ஆம் ஆண்டு வெளியிட்டார்.

தன்னை நாடிவருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகைளை மனம் கோணாமல் செய்து வருபவர்.இந்த நிலையில் இன்றைய நல்லாட்சியில் இவரது கோவை பரிசிலனை செய்யப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் அரசியலில் இருந்து விலகியது பொது மக்களுக்கு பெரும் இழப்பாகும் இருந்த போதிலும் இவரின் பதவியின் மூலம் மக்களுக்கு உதவி செய்வார் என்பதில் சந்தேகமில்லை.
இவர் 1965.02.10ஆம் திகதி மருதமுனையில் பிறந்த இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் அனுஸ்லெப்பை மரைக்கார்; செயினுலாப்தீன்,ஆதம்பாவா ஹபீபா உம்மா தம்பதியின் மூத்த புதல்வராவார்.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -