ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹீம் M.H.M.அஷ்ரப் சேர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து 18 வருடங்கள் கடந்த நிலையிலும் அன்னார் அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.
." இலங்கை முஸ்லீம் சமூகத்தின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தி நமக்கான தனித்துவமிக்க அரசியல் அடையாளத்தை பெற்றுத்தந்த" நமது பெருந் தலைவர் அவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் , பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.S. தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது என்பதை நமது போராளிகள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
எனவே இன்நிகழ்வில் நமது உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பிரதித் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு நமது மாவட்ட தலைவர் கௌரவ M.S.தௌபீக் அவர்கள் வேண்டிக் கொள்கின்றார்கள்.
காலம் ; 16.09.2018
இடம் ; ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மாவட்ட காரியாலயம்
நேரம் ; மாலை 4.30 மணி தொடக்கம்