எம்.எஸ்.எம்.ஸாகிர்-
இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் இருந்து 12 மாணவ, மாணவிகள் புலமைப்பரிசில் பெறுவதற்கு தகைமை பெற்று, தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். தர்ஜுன் தெரிவித்துள்ளார்.
புலமையில் சாதனை படைத்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்தமைக்காக, கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். தர்ஜுன் மற்றும் புலமைப்பரிசில் கற்பித்த ஆசிரியர்களான, எம்.ஏ. காமின், திருமதி எப்.எம். றிஸாம்டீன், திருமதி யூ.எஸ்.ஏ. ஹம்தி மற்றும் சக ஆசிரியர்கள் ஆகியோர் சித்தி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் மற்றும் புலமைப்பரிசில் கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் ஆகியோர்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
புலமைப்பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்ற மாணவர்களை படங்களில் காணலாம்.
1. முஹம்மது லுத்பி அய்மன் சலாப் - 179
2. துஷாந்தன் சனூஜன் - 176
3. மர்சூக் பாத்திமா றினூஸா - 174
4. ரசீது முஹம்மது இஹ்ஷான் - 174
5. முஹம்மது சியாம் முஹம்மது அம்ரித் - 172
6. அன்வர் ஷதாத் பாத்திமா ஷதா - 171
7. ஹாமீன் முஹம்மது அனாப் - 169
8. முஹம்மத் நுஸ்கி முஹம்மது அம்ஹர் - 167
9. கஸ்ஸாலி யூசுப் ஸனாரி - 166
10. அமீன் பாத்திமா ஷேஹா - 166
11 முஹம்மது லாஹிர் முஹம்மது யூசுப் - 164
12. முஹம்மது முசீத் ஹப்னத் மத்ஹா - 163