ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் பட்ஜெட் குறித்து, பல்வேறு விதமான தகவல்களை கேட்டிருப்போம். இந்நிலையில் முதல் முறையாக ‘2.0’ படக்குழுவினர் உண்மையான பட்ஜெட் எவ்வளவு என்று அறிவித்துள்ளது.
அதன்படி, ‘2.0’ படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி ஆகும். முதல்முறை செய்த VFX தொழில்நுட்பம் மிக மோசமாக இருந்ததால், இரண்டாவது முறை VFX செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகான பட்ஜெட் மதிப்பு தான் ரூ.400 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வழக்கமான 3டி படங்களை விட, ‘2.0’ படத்திற்கு அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் வழக்கமாக 3டி படங்கள், முதலில் 2டியில் படம்பிடிக்கப் பட்டு, பின்னர் 3டிக்கு மாற்றம் செய்யப்படும். ஆனால் ‘2.0’ படம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கப் பட்டுள்ளது.
இம்முறை வட இந்தியாவில் படத்திற்கு அதிக விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் ரஜினிக்கு ஹிந்தியில் மோசமான பாக்ஸ் வசூலே இருக்கிறது. கடைசியாக வெளியான ‘காலா’ படமும் வடக்கே வரவேற்பை பெறவில்லை.