தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 350 மில்லியன் ரூபா செலவில் கேட்போர் கூடம்!!!

சலீம் றமீஸ்-

350 மில்லியன் ரூபா செலவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கேட்போர் கூடம் இவ் வருட இறுதிக்குள் நிறைவு பெறும்!

-உபவேந்தர் பேராசிரியர் நாஜீம் தெரிவிப்பு - 
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான கேட்போர் கூடம் இவ்வருட இறுதிக்குள் பூரணப் படுத்தப்பட்டு பாவணைக்கு வழங்கப்படும் என பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

குவைத் அரசாங்கத்தின் நிதி ஊடாக அமைக்கப்பட்டு வரும் 1200 இருக்கைகள் கொண்ட முற்றிலும் குளிரூட்டப்பட்ட நவீனமான இக் கேட்போர் கூடத்தின் நிர்மாண பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் உபவேந்தர் பேராசிரியர் நாஜீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார.;

இந்த கேட்போர் கூடத்தின் பயனாக இப் பல்கலைக் கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா, மாநாடுகள், கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உட்பட ஏனைய அனைத்து நிகழ்வுகளையும் நடாத்த முடியும் எனவும், எதிர்வரும் 2019 ஆண்டுக்கான மாணவர்களின் பட்டமளிப்பு விழாவினை இதே மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் பேராசிரியர் நாஜீம் மேலும் தெரிவித்தார்.
இந்த கேட்போர் கூடத்தினை அமைப்பதற்கான அனுமதி கடந்த 2011 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றும் அதனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் பின் போடப்பட்டிருந்தன. இதனை கண்டறிந்த உபவேந்தர் நாஜீம் அவர்கள் தனது முதல் மூன்று வருட பதவிக் காலத்தில் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இக்கேட்போர் கூடம் அமைக்கப்பட்டு வருவதாகவும், குளிரூட்டி பொருத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் வடிவமைக்கப்பட்ட இக் கூடத்தினை ஒதுக்கப்பட்ட நிதிக்குள் குளிரூட்டிகள் பொருத்தப்பட்ட கேட்போர் கூடமாக அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்மைவாக இது கால வரையும் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வந்த வருடாந்தப் பட்டமளிப்பு விழாக்கள் எதிர்காலத்தில் பல்கலைக் கழக ஒலுவில் வளாகத்தில் நடாத்த முடியும் எனவும், அதன் மூலமாக செலவுகளை மிகவும் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது பல்கலைக் கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நிதியாளர் பஸிலுர் ரகுமான், வேலைப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பஸீல், பிரதிப் பதிவாளர் எம்.ஐ.நௌபர், வேலை அத்தியட்சகர் எம்.எம்.அப்புல் சலீம் மற்றும் ஒப்பந்த வேலைப் பொறுப்பாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -