அலிஷ் கலை ஊடக-இலக்கிய-சமூக சேவை மையத்தின் 9 ஆவது அகவையை முன்னிட்டு 'நமது திறனால் நம்மை வெல்வோம்' எனும் தொனிப் பொருளில் தனியாள் ஆளுமை விருத்தி தொடர்பான ஒரு நாள் சான்றிதழ் செயலமர்வொன்று வலையமைப்பின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையில் மருதமுனை கலசார மண்டபத்தில்
சிறப்பாக நடைபெற்றது.
நேற்று 30 ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வில் இந்திய சக்ஸஸ் மாந்த்ரா நிறுவனப் பணிப்பாளர்துறை சார் வல்லுனர் சரவணன் தியாகராஜன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரப்பிள்ளையின் பேரன் இந்திய குறும்பட இயக்குனர்-கவிஞர் மணி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள்-பல்கலைக்கழக மாணவர்கள்-ஆசிரியர்கள்-அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் பங்கு கொண்டதுடன் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இறுதியாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.